பக்கம்:ரூபாவதி.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

என்ற எண்ணத்தோடு தானே நம்மைக் கடவுள் பாண்டி காட்டின் மீது படையெடுத்து வழுதியை வெல்லுமாறு துண்டினர்? குடி. களிடங் கொடியரெனும் பெயர் பெற்ருேம்! ஒ! அதுமட்டோ? குடிகளுமெம்மைக் கொல்லத் தலைப்படுகின்ருர்கள்! இந்த நாட் டார் யாவர்க்கும் நாம் அரசாள்வதில் விருப்பமில்லைபோலும்! இக்காட்டுள் எவ்விடக் திரும்பினுலும் எமக்குப் பகைவர்கள் காணப்படுகின்ருர்களே யொழிய நண்பர் ஒருவரையாவதிகாளுேம்!

இவ்வாறு கம்மேற்பிரியமில்லாக் குடிகள் வாழும் காட்டைப் படை

கொண்டு அடக்கி ஆள்வதிற் பயன்ருன் என்னையோ ? (மெளனம்)

பாம்பரையாயுள்ள சோ காட்டையும் இழந்து விடுவேமோ? போரினுற் பெற்ற பாண்டி நாட்டை இழத்தல் திண்ணமேயாம். அந்தோ என்ன எண்ண மெண்ணுகின்றேம் -(மெளனம்) எ! வர்மா ! இத்தனே துன்பங்களையும் அனுபவித்துக் கொண்டாவது நீ உயிர் வாழவேண்டுகின்ருயோ? உன்னே நேசிப்பார் සෟෂඹි இல்லையே! உனக்கு அரசாட்சியும் வேண்டுமோ ?-(மெளனம்) இதற்கு முன் எனது அருமை மகள் ரூபாவதியை இழந்து விட்டேன்!-ஒ! ரூபாவதி ! உன்னே யிழந்தபிறகும் நான் அாசு புரிய இச்சிப்பது என்ன அறிவின் மைகாண்! அது கள்ளிக் கொம்புக்கு வெள்ளிப்பூண் கட்டத் துணித்ததுபோ லாகுமன்ருே? எனக்கோ உன்னத் தவிர்த்து வேறு சந்ததிகளில்லே. நீ காணுமற் போனது முதல் எனக்கு ஒன்றுக் தோன்றவில்லை! ஐயோ! இவ் ஆர்ப் பேய்ச்சனங்களுக்கு உன்னைப் பலிகொடுத்த கொடும்பாதக

னேனும்வாழவேண்டுமோ (மெளனம்) எனது பாதகச் செயல்களோ கணக்கற்றன! கன்னடக்கையே வடிவெடுத்து வந்தாற் போன்றசற்

குண்வழுதியையும், அழகு கிறைந்த அவரது மண்வியையும் சிறையிலிட்டுக் காட்டிற்றுரத்தினுேம் சிவபிரான் அவர்களே அவ் விடத்துங் கருணைபுரிந்து காத்தருளினர் 1-இன்னும் வழுதிமகன் சுந்தராதத்தனை, ஒருபாவமுமறியாதவனே, கலயெலாமுணர்ந்த கட் டழகுடையவனே, சாத்தமே புருவமாயிருந்தவனேச் சிறைச்சாலை யிலிட்டு வருத்திக் கொன்றுவிட்டோம்! ஒ! கொலைப்பாதகச் சூரசோ! நீ உயிர்துறந்து விண்ணுடு புக்கு ஆங்குள்ள சுந்தா நத்தனிடம் பொறுக்கும்படி கேட்டுக்கொள்ளுதலே தகுதி!--

(மெளனம்) ஐயோ! தெய்வமே! மகளேயிழந்து, உணவையொழிந்து,

மானமழிந்து, கொலைகள்புரிந்து, வீரமிழந்து, பகைவர்கள் பாதத் தில் விழுந்து, அவரொடு சமாதானமாகி மனமொவ்வாத கிப்த் தனகள் அடங்கிய உடன்படிக்கை செய்துகொண்டு உயிர்வாழ்க்

திருத்தலைக் காட்டிலும், தற்கொலைசெய்து கோடல் நல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/101&oldid=657147" இலிருந்து மீள்விக்கப்பட்டது