பக்கம்:ரூபாவதி.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ரு பா வ தி 25

சுந்தரி:-இன்னும் எவ்வளவு துராம் இருக்கும் அப்பா அந்தச் சாவடி :

வேடன்:-இதோ! கிட்டத்திலே தான் அம்மா !

சுந்தரி:-ஆனற் சரி.

சற்குணன்:-மெல்ல! மெல்ல! என் கையைப் பிடித்துக்கொள்.

வேடன்:-நான் முன்லுக்குப் போறேன். பின்னுக்கு நீங்க மெதுவா வாங்க. (யாவரும் போகின்றனர்.)

மூன்ருங்களம் இடம்:-காட்டில் முனிவராச்சிரமம் காலம்:-மாலை பாத்திரங்கள்:-ஞாகதீபர், ஆன்மநாதர் - ஞாகதீபர்-அப்பா ஆத்மகாதா! செய்யவேண்டிய காரியத்தையெல்லாஞ் செய்து விட்டாயா சிவஞானபோத சூத்திரங்களை நேற்றுச் சிரவ ணம் பண்ணினயே! இன்றைக்கு அவற்றை எல்லாம் மனனம் பண்ணிவிட்டாயா மேற் போகலாமா? ஆன்மநாதர்:-ஆக்ஞாப்பிரகாரம், சகல காரியங்களையுஞ் சம்பூர்ணப்படுத்தி விட்டேன். சிரவணம் பண்ணின சூத்திரங்களிற் சில மனத்தில் அவகாஹப்படவில்லை. ஆகையால் அவை முழுவதையும் மனனம் பண்ணத் தடைப்பட்டது. ஆகையா லென்னே கூதமித்து என்மீது மீட்டுங் கிருபை கூரவேண்டும். - - ஞாகதீபர்-அந்தப் பிரகாரமே, உனக்கு மறுபடியும் மனத்திற் படும்படி சொல்லுகின்றேன். இதற்கு முன்னே நீஹரதத்த சிவாசாரியர் பழுக்கப் பழுக்க நெருப்பிலே காய்ந்த இருப்பு முக்காலியிலே விற்றிருந்து திருவாய் மலர்ந்தருளிய சிவபரத்வ நிரூபணசுலோக பஞ்சகம் படனமாயிற்ரு . ஆன்மநாதர்-திருவுளப் பிரகாம், படனமாயிற்று. கட்டளையளித்தாற் ** சொல்லுகின்றேன்.

- (சற்குணன், சுந்தரி, வேடன் இவர்கள் விளிக்கின்றனர்.) ஞாகதீபர்:-அதிருக்கட்டும். யாரோ வாசலில்வந்து சாமி சாமி என்று > கூப்பிடுகிறது போலத் தோன்றுகின்றது. அதென்னவென்று

போய்ப்பார்த்து ᎧufᎱ, . * | - (ஆன்மநாதர் வெளியே போய் வருகின்றர்) ஆன்மாதர்-யாரோ இருவர், ஸ்திரியுமான்கள், வெய்யிலாற் களைத்தவர், செவ்விய மேனியர், சிறந்த நோக்கினர், வாடிய முகத்தினர், அழுத கண்ணினர், வந்துளர். அவர்கள் சமீபத்தில் ஒரு வேடனும் கிற்கின்ருன். - 4.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/26&oldid=656980" இலிருந்து மீள்விக்கப்பட்டது