பக்கம்:ரூபாவதி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாசியற்றிய (இரண்டாம்

தோகை மா மயில்கா கொன்னேச் சுந்தா சக்தன் வர்தாம் கோகிலங் கான்சு சங்கான் கடவுமின் தயவு செய்கே. (འཆའ་ཚོ) -(மெளனம்) என்னுடைய தோழிமார் ஒருவேளை இதைக் கேட் டுக்கொண்டு வருவார்களோ ? ஐயோ! என்னுடைய இந்தச் செயல்களெல்லாம் என் தகப்பனுருக்குத் தெரிந்து விட்டால் என்ன செய்வேன் ! நான் கெடுவதே பன்றி என்னுடைய அரு மைச் சுந்தாாருந்தனுக்கும் கேடுவிளையுமே! அம்ம! ஒ கொடுமை ! கொடுமை !-அதோ அம்புஜாட்சி வருகின்ருள். இனிமேல் நான் இதைக் குறித்து பேசப்படாது.

(அம்புஜாட்சி வருகின்ருள்.) அம்புஜாட்சி ஏன் இவ்வளவு தாமதம் ? அம்புஜாட்சி:-என்னவோ? அம்மா காகமாலேயும் கானும் இரண்டு பேரு மாய்ப் போனுேம். அவளை யெங்கேயோ காணேன். இதுவரைக் கும் வருவள் வருவளென்று காத்துக் கொண்டிருந்தேன். இன் உம் வாவில்லே. ஒருவேளை எனக்கு முத்தியே இங்கே வந்து விட்டாளோ என்று கினைத்து வந்தேன். அவள் இங்கே வங் தாளோ?

(காசுமாலே வருகின்ருள்.) ருபாவதி:- அப்படித் திரும்பிப்பார் யாரென்று! அம்புஜாட்சி:-என்னடி அம்மா! ககமாலே இதுவரைக்கும் எங்கே போயி ருந்தாய்? உனக்காக எவ்வளவு நாழிகை காத்துக்கொண்டிருக் கிறது? ரூபாவதி தனியாயிருக்கிருளே என்று வந்துவிட்டேன். ஏதாவது என் பேரிலே கோபமோடி அம்மா ? கநகமாலே-இதற்குக் கோபமென்ன கோபம்? நீ என்ன பெரிய கலை போகிற காரியஞ் செய்துவிட்டாய், அதற்கு நான் உன்னே கோபித் துக்கொள்ள என்னவோ இப்படியே போனேன். அங்கே யோரி டத்தில் இரண்டு மான்கள் துள்ளி விளையாடின. அந்த வேடிக்கை யைப் பார்த்துக்கொண்டே இருந்து விட்டேன். அதுதான் கொஞ் சம் தாமதமாய்விட்டது. நம்முடைய ரூபாவதியை வெகுநாழிகை காக்கும்படி வைத்துவிட்டோமே என்று வருத்தப்படுகிறேன். ருபாவதி:-இந்த அற்ப காரியத்திற்காக நீ வருத்தப்படுவானேன் கானும் இங்கே ஒரு மயில் அழகாய்த் தோகை விரித்தாடிற்று. அதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அம்புஜாட்சி:-ஏன் ரூபாவதி நான் ஒன்று கேட்கிறேன்-கோபித்துக்

கொள்ளாதிருந்தாற் சொல்லுகிறேன். ருபாவதி:-கோபித்துக் கொள்ளுகிறதென்ன ? சொல்லடி சொல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/35&oldid=657001" இலிருந்து மீள்விக்கப்பட்டது