பக்கம்:ரூபாவதி.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

படையெடுப்பான். இன்னெரு சோழனும் படையெடுப்பான்

(மெளனம்)
  • முற்பகம் செய்யிற் பிற்பகல் விளையும்' (சங்) என்றவள் வாக்கியம் பொய்த்துப்போகுமோ?-இவற்றையெல் லாங் கொஞ்சங்கூட யோசியாமல் என் தகப்பனர் கொடுமையின் மேற் கொடுமையாய்ச்செய்ய நினைப்பது மடமையினும் மடம்ை யாம். அந்தோ! இவரதறியாமைக்கென்ன செய்வேன்?-முன் செய்த கொடு வினைக்கே யூர்முழுதும் அலர் தூற்றுகின்றதே! அப்படியிருக்கஇவர் மறுபடியும் அத்தன்மையான செயல் செய்ய யோசித்தல் தாஞ்சாக மருந்து குடித்தல்போலும்!-ஊரார் பழிப் பதை யிவர் கேட்டு மிராரோ?-கேட்டிருந்தால் இப்படி யோசனே செய்வானேன்?-அவர்க்கு இவ் ஆரார் பழிப்பது தெரியாமல் தானிருக்கவேண்டும் !-ஐயோ! இதைக்குறித்து என்தகப்பன ருக்கு எவ்வாறுதெரிவிப்பேன்ரி- எனது தாயின்மூலமாய்த் தெரிவிக்கலாம் என்ருலும் சரிப்படாதே. அவள் என்தகப்பனர் சொல்வதை யெல்லாம் மறுத்துரையாமற் சரி சரி என்று கூறுபவ ளாவளே!-எவரிடஞ்சொல்லி யென்தகப்பனருக்குத் தெரிவிப் பேன்சி-அவ்வாறு அவர்க்குத் தெரிவிப்பது முடியாதுபோயின் என்னசெய்வேன்!-ஓ! சுந்தராநந்தனே!-என்னுயிர்த் தலைவனே!. பாண்டியர் குலகிலகனே! பைந்தமிழ் வல்ல பரமசாதுவே உனக்கு என்மீது பரிபூரண நேசமிருக்கிறதென்பதை யுணர்ந்து கொண் டேன்! ஆகையால் உன்னே மணந்து சுகிப்பது எங்காளாவதுகூடும் என்று எண்ணி யிதுவரைக்குங் கொஞ்சம் ஆறுதல் அடைக் திருந்தேன்!-இனி யான் பிழைத்திரேன்! பிழைத்திரேன்-உன்

னுயிர்க்குக் கேடு சூழ்கின்ற என் தகப்பளுரைத் துறப்பேன்!

இன்று முதல் யான் அவர்க்கு மகளல்லேன் !

1 : கொடுங்கோன் மன்னர் வாழு காட்டிற்

கடும்புலி வாழுங் காடு என்றே: - (ச) என்ற பாண்டியன் வாய்மொழியைத் தூய்மொழியாய்க் கொண் டேன். ஒ எனது பிராணசுந்தாாந்தனே! நீ பிழைத்திருந்தா லன்ருே யானும் பிழைப்பேன்? உன்னேயின்றி, யான் பிழைத்திருத் தல் முயற்கொம்பு பெறுதல் போலும். ஆதலின் என் தகப்பனர் இனிச்செய்யப்போகும் கொடுந்தொழிற்கு நீ யிரையாகாது உன்

இனத் தப்புவித்தற்குரிய உபாயமொன்று செய்வேன்:-ஐயோ! இக்

கொலைப் பாதகத்தை உனக்கு எவ்வாற தெரிவிப்பேன்? யாரிடஞ்

அ கொன்றை வேந்தன் - t நறுக்தொகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/57&oldid=657049" இலிருந்து மீள்விக்கப்பட்டது