________________
தீண்டாமை
தமிழ் நாட்டி சிந்தனையைச் சிறப்புற விளக்கிடும், எழில் மிகுந்த, கோயில்கள் உள்ளன ; முடியுடை மூவேந் தர்களும், பல்லவரும் கட்டிய ஆலயங்கள் - அவை ஒவ்வொன்றுக்கும், சிறப்புகள், மகிமைகள், கூறப் பட்டுள்ளன. பாடல் பெற்ற ஸ்தலங்கள் என்று புகழப்படுகின்றன. ஒவ்வொருகோயிலுக்கும் ஒவ்வொரு அற்புதம் கூறப்படுகிறது. தாயுமானார், தயாபரர், தீராத வல்வினையைத் தீர்த்தவர், தில்லை யில் திரு நடனம் புரிபவர் திருவரங்கத்து அண்ணல் என்று, பெயரிலேயே பொருட் செறிவும் வைத்துப் பேசப்படுகிறது. பாடல் கேட்டுக் கதவு திறக்கப் பட்ட கோயில், படிக்காசு கிடைத்த கோயில், தூது சென்ற தலம் என்று பல்வேறு, மகிமைக் கதைகள் கூறப்படுகின் றன.
எங்கு பார்த்தாலும், சிற்பிகளின்
ஆலயங்கள்
உள்ளன,
அதாவது ஏராளமாக அவைகளின் அழகும் மகிமையும் பேசப்படும் கின் றன ; அங்கு சென்று சேவிப்பது இகபரசுகம் தரும் என்று பேசப்படுகிறது. கோயிலில்லா ஊரிலே குடியிருக்கவே வேண்டாம் என்பது பழ மொழி. திருக்கோயிலை வலம் வராத-கால் என்ன காலே, ஐயனைச் சென்று கானாத கண் என்ன கண்ணே? என்று பஜனைகள் நடக்கின்றன.