பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புற்று இருந்தது. நன்ருகப் பெருத்துப் பழுத்த ஒரு மரம் பழத்தை அந்தப் புற்று மறைத்துக்கொண்டிருந்தது. எறும்பு களுக்குப் பயந்து எந்தக் குரங்கும் கிளை நுனி வரை போக வில்லை. ஆகையால், அங்கே ஒரு பழம் இருந்தது குரங்குகளின் கண்களுக்குத் தெரியாமலே போயிற்று. அந்தப் பழம் நன்ருகப் பழுத்ததும் தானகத் தண்ணிரில் விழுந்தது. ஒடையில் மிதந்து சென்று ஓர் ஆற்றை அடிைந் தது. ஆற்றங்கரையில் ஓர் அரண்மனை இருந்தது; அங்கு அரசன் குளிக்கும் குளத்திற்குள் ஆற்று நீரோடு மாம்பழமும் போய்ச் சேர்ந்தது. . . அப்போதுதான் பறித்ததுபோல் இருந்தது அந்தப் பழம். அரசன் அதைத் தின்று பார்த்தான். இவ்வளவு சுவையான, இனிமையான பழத்தை அவன் அதுவரை தின்றதே இல்லை. இத்தகைய அற்புதமான பழம் கிடைக்கும் தோப்பு எங்கே? அதை உடனே கண்டு பிடித்தாகவேண்டும் என்று துடித் தான் மன்னன். -