பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

101

இந்தக் கதையெல்லாம் மைத்ரேயிக்கு ஆர்வமாகக் கேட்கச் சுவைக்கவில்லை. அவளுடைய எதிர்காலத்தைப் பற்றிய எண்ணங்கள் இன்னும் உருப்பெறவில்லையே?

“மாமி, அநுசுயா என்னமோ ஃபாரம்னு கொண்டுவந்து கொடுத்தாளே அது எனக்கா?”

“உன்னை ஹோம்ல சேக்க வந்திருப்பதாகத்தான் அவ நினைச்சிண்டிருப்பா. ஹோம் வேண்டாம். நீ நல்ல குலத்தில் பிறந்திருக்கே. அதை எதுக்கு அழிச்சுக்கணும்?”

மைத்ரேயிக்குப் புரியவில்லை.

“இந்தப் பிராமணசாதிதான் கட்டுப்பாடு இல்லாம சீரழிகிறது. முதலியார், பிள்ளை எல்லாம் விட்டுக்கொடுக்கறாளா? அந்த ஹோமுக்குப் போனா, உன் குலம் கோத்திரம் எல்லாம் அழிஞ்சு போகும். அம்மா தெரியாதது, அப்பா தெரியாதது, ஒன்றரைக் கண், மாறுகண், இப்படி ஒரு மந்தைக் குழந்தைகள் இருக்கும். கதியத்து வயிற்றில் வாங்கிண்டு கழுத்தைத் திருகிப்போட மனசில்லாம வந்து சேர்த்துட்டுப் போற கழிசடைகள் அங்கே சேரலாம். உன்னைப் பார்த்தால் ராஜாத்தி மாதிரி இருக்கு. நீ எதுக்கு அங்கே போகணும்?....”

மைத்ரேயி, குட்டை குழம்பிவிட்டாற்போல் விழிக்கிறாள்.

“நான் பின்னே என்ன செய்வது? என்னை இங்கேயே சமையல் வேலை செய்யச் சொல்றேளா? எனக்குப் படிக்க ஆசையாயிருக்கிறது மாமி.”

“படியேன்? யார் வேண்டாங்கறா? அதுக்காக அந்தக் கலப்படச் சந்தையிலே போய் பரம்பரையையே அழிச்சுக்கணுமா? நான் எங்க சொர்ணத்தையே அங்கே விடச் சம்மதிக்கலியே? இந்தக் கோகிலா, அநுசுயா தொட்டுச் சாப்பிட மாட்டாள். அவ சேரிலேந்து வந்த பொண்ணு. அழுக்குத் தேச்சுக் குளிச்சிட்டா சாதிக்கறை போகுமாம்பா அவ. அநுசுயா போல இருக்கிறவாளுக்கு அது சரி. நீ போறது எனக்குச் சரியாப்படல. இந்தாத்திலே சமையல் வேலை செய்யறது என்ன தப்பு? லோகா ரொம்ப நல்லவ. நீ சமர்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/103&oldid=1123727" இலிருந்து மீள்விக்கப்பட்டது