பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

ரோஜா இதழ்கள்

பெண்கள் படித்தார்கள். ஆனால் அவளைப் போல் மனமழிந்து ஒரு போலியைத் தெய்வீகக் காதலென்று நம்பும் நிலைக்கு யாரும் வரவில்லை என்பதை நினைத்துப் பார்க்கையில் மனம் குன்றிப் போகிறது. புவியில் பிறந்ததன் காரணமாக, ஒரு பெண்ணாய்ப் பிறந்ததன் காரணமாக, குறிப்பிட்டதொரு உயர்ந்த சாதியிற் பிறந்ததன் காரணமாக, ஒரு சமுதாயத்தின் அங்கமாக இருப்பதன் காரணமாக அவளுக்குப் புரியாமலேயே கண்ணுக்குத் தெரியாத பொறுப்புகளும், பிணிப்புகளும் அவளுடைய அறியாமையில் விளையும் சுதந்திரமான போக்கைத் தடை செய்கின்றன. அவள் அங்கம் வகிக்கும் சமுதாயப் பெண்டிர் கற்பு நெறியுள்ளவரல்ல என்ற கூற்றுக்கு விளக்கம் காணவே தங்களை இந்த இழிநிலைக்குத் தூண்ட வலை வீசி இருக்கலாம். உண்மையில் காதல் என்ற ஒன்று கிடையாது. தனராஜுவின் மீது அவள் கொண்ட நட்பு காதலாக, எழுத்தில் ஏற்றி வைத்தும் அரிய பண்பாக இருந்திருந்தால் அம்மணியம்மாளின் எச்சரிக்கை மிகப் பெரிய கருநாகமாக அவளைத் துரத்திக் கொண்டு ஓடி வருவது போல் அச்சுறுத்தியிருக்குமோ?

தனராஜின் மீது காதல் கொண்டதாக நினைத்ததே பிரமை.

அந்த வீட்டுச் சமையலறை என்றால் மூச்சுவிடப் பொழுது இருக்காது என்று மைத்ரேயி புரிந்து கொள்கிறாள்.

பாலா மூன்று மணிக்கே கல்லூரியிலிருந்து வந்து விடுகிறாள்.

ரவாலட்டும் பஜ்ஜியும் செய்யச் சொல்கிறாள். பர்ண சாலைக்கு மதுரம் காபியும் சிற்றுண்டியும் கொண்டு கொடுக்கிறாள்.

சேதுவைப் பார்க்க ஐந்தாறு நண்பர்கள் வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் காப்பி, சிற்றுண்டி கொண்டு போகிறாள் பாலா.

லோகா மாலை ஆறேகால் மணிக்கு ஒரு கூடை எலுமிச்ச பழத்தைக் கொண்டு போட்டுவிட்டு வெறும் தேநீர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/106&oldid=1101962" இலிருந்து மீள்விக்கப்பட்டது