பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/110

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

ரோஜா இதழ்கள்

மைத்ரேயி ஏதேதோ நினைவலைகளின் மீது அலைந்தபடியே கண்ணயர்ந்திருக்கிறாள்.

யாரோ விசும்பி அழும் ஒலி கேட்டுச் சரேலென்று விழித்துக் கொள்கிறாள். மதுரம்தான். இருளில் அவள் குப்புறப்படுத்துக் கொண்டிருப்பது தெளிவாகிறது. தோள்கள் எழும்பித் தணிகின்றன.,

“மாமி...? மதுரம் மாமி? மதுரம் மாமி...”

மதுரம் விம்மலடங்கிக் கண்ணீரைத் துடைத்துக் கொள்ளச் சில விநாடிகள் செல்கின்றன.

“செ! என் தலைவிதியை நினைச்சுண்டா சிலசமயம் இப்படித்தான் பொறுக்காம வந்துடும். சனியன் இப்படிப் பொண்ணாப் பிறந்திருக்கவே வேண்டாம்... கட்டின புருஷன் சரியில்லை. வாய்த்த பிள்ளை அதைவிட மோசம். விடுதலையுமில்லை; விமோசனமுமில்லை.”

“அழாதேங்கோ மாமி...”

“இதுகளை எல்லாம் விட்டுத் தொலைச்சிட்டு எங்கேனும் கண் காணாமல் போயிடலான்னு தோணும். பின்னும் துணிச்சல் வராம இந்தப் பாசபந்தத்தில் அடிபட்டுச் சிக்கிச் சுழல்றேன்...”

அந்தக் கணத்தில் மைத்ரேயிக்குதான் குன்றின்மேல் நிற்பதுபோல் தோன்றுகிறது.


6

னராஜுடன் கூடிவாழ்ந்து ஒரு மகவுக்குத் தாயாகி யிருந்தால் மதுரத்தைப்போல் அவளும் ஒரு விதியில் சிக்கி நிலைகுலையத் தடுமாறிக் கொண்டிருப்பாளோ? தன் மானத்தை, புருஷனின் மானத்தை, உடன்பிறப்பின் மானத்தை, தான் பிறந்த குலத்தின் மானத்தை, அவள் விட்டுக் கொடுக்கா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/110&oldid=1123729" இலிருந்து மீள்விக்கப்பட்டது