பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/111

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

109

மலிருப்பதற்காகச் சிரிக்கிறாள்; குழைகிறாள்; வேதனைகளைப் போர்த்துக்கொண்டு குனியவேண்டிய இடத்தில் குனிந்து நிமிர வேண்டிய இடத்தில் நிமிர்ந்து நடமாடுகிறாள். இருளின் தனிமையில் அந்தப் போர்வைகள் ஊசிக்குத்தல்களாகப் பிடுங்குகின்றன; கண்ணீர் வடிக்கிறாள்.

மைத்ரேயி அதுவரையிலும் தனக்கு அறிமுகமான, பார்த்த, உறவாடிய, இரத்தக் கலப்புடைய பெண்களை எல்லாம் நினைத்துப் பார்க்கிறாள்.

அவளுடைய அம்மா...அம்மா யார்?

அகங்காரமும் ஆணவமுமே உருவான புருஷனின் அடிமை; கைப்பொம்மை.

அடுத்தடுத்துப் பிள்ளை பெறும் கருவி.

அந்தத் தாயைத் தந்தை ஒரு நாளும் மனைவி என்ற மதிப்புக் கொடுத்தே நடத்தியவரல்ல என்பதையே அவள் தன் நினைவு தெரிந்தபின் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறாள். அவள் உடல் நலிந்து சக்கையானதும் தன் போகக் கருவியாக அவர் இன்னொருத்தியைத் தேடிக் கொண்டார். அந்த இன்னொருத்தி மட்டும் குன்றேறி நின்றாளா? ஐந்து ஆண்டுகளுக்கு விளையாட்டுப் பொம்மை. பிறகு அவளை வைத்துக்கொண்டு பணத்தைப் பெற யாரோ சகோதரன் உறவில் முளைத்தானாம். கட்டியவளையும் குழந்தைகளையும் வஞ்சித்து, இளையவளுக்கே அவர் எழுதிக் கொடுத்த பொருளை அந்தச் சோதரன் பெற்றுக் கொண்டு அவளையும் ஏமாற்றி நடுத்தெருவில் விட்டான். கோடம்பாக்கம் பிராந்தியத்தில் அவள் அம்மா, பாட்டி தோழி என்ற சில்லறை வேடங்களுக்குத் தவம் கிடந்து எப்படியோ வயிறு நிரப்புவதைப் பற்றி அற்பத் திருப்தியுடன் அக்கா சொல்வது வழக்கம்.

அக்கா... அந்த அக்கா மட்டும் எப்படியாம்?

சொந்தத் தாயின் வயிற்றில் தன்னோடு பிறந்த தங்கைகளைச் சிறுமைப்படுத்தி, கட்டியவனின் மனிதர்களுக்குமுன் குழைகிறாள். என் தங்கைகள், என்னுடன் பிறந்தவர்கள், என் தந்தை வாங்கிக் கட்டிய வீடு, எனக்கு அவர்களைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/111&oldid=1101971" இலிருந்து மீள்விக்கப்பட்டது