பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

ரோஜா இதழ்கள்

உடனே திரும்பிவிட்டார். ஒன்றுவிட்ட, இரண்டு விட்ட சகோதரர்கள், மாமன் மகன் என்று சகஜமாக உறவும் நட்பும் கொண்டு பழகவும் அவளுக்கு யாருமே இல்லை. வயசுக்கு வருமுன்பே, ஆடவரின் முன் கூச்சப் போர்வையின்றி வந்து பழகக்கூடாது என்ற கண்டிப்பு வலைகளை நெருக்கமாக அக்கா பின்னியிருந்ததால் தான் அவள் அவற்றை அறுத்துக் கொண்டு தனராஜின் கவர்ச்சிச் சிரிப்புக்கு அடிமையாய், அவனைத் தொட்டுத் தன்னை இழக்கும் அளவுக்குப்போக நேர்ந்ததாக இப்போது மைத்ரேயி நினைக்கிறாள்.

அக்கா, தன்னுடன் பிறந்த சகோதரியையே ஏன் மாற்றந்தாய் மகளைப்போல் நடத்தினாள்?

அந்தத் திருவள்ளூர்க் கிழவி சொன்னாற்போல், அடி நாட்களில் அவளுக்கு அத்தையே மாமியாராகிக் கொடுமை காட்டியிருக்கிறாள். பெற்ற தகப்பன் குடும்பத்தை மறந்து வஞ்சகம் செய்தது அவளுக்குச் சிறுமைதானே? அந்தச் சிறுமையே அவளுக்கு வெறுப்பை வளர்த்திருக்கக்கூடும்; மணவாழ்வில் அவளுக்கென்று குழந்தை பிறந்து பாசத்தையும் அன்பையும் பெருக்கக்கூடிய பேறு கிட்டியிருக்கவில்லை. தன் ஏமாற்றங்களை அவள் விழுங்கிக்கொள்ள நேர்ந்ததால் இரக்கமும் பரிவும் வற்றிப்போயிருக்கலாம். அவளுக்கு இத்தனை நாட்கள் சென்ற பின் மகப்பேறு வாய்த்திருக்கிறது என்று மதுரம் மாமி கூறியதை அவளால் நம்ப இயலவில்லை.

பல மருத்துவர்களிடம் அக்கா மகப்பேற்றுக் குறைக்காக போய் வந்திருக்கிறாள். மதுரம் மாமி கூறியது உண்மையாக இருந்திருந்தால், அத்திம்பேர் அவ்வளவு கடுமையாக நிச்சயம் அவளை விரட்டியிருக்க மாட்டார். எனவே அக்காவின் உடல் நிலையில் ஏதேனும் கோளாறாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

சிந்தனைக் கொடி இவ்வண்ணம் நீண்டுகொண்டு செல்லுகையில், மைத்ரேயிக்கு ஓர் உண்மை பளிச்சென்று விளங்குகிறது.

பெண்ணுக்குச் சுயமாக எழுந்து நின்று உலகை வளைத்துக் கொண்டோ, எதிர்த்துக் கொண்டோ வாழத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/114&oldid=1101979" இலிருந்து மீள்விக்கப்பட்டது