பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/117

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

115

சிண்டிருக்கார். நீ வந்து இருந்தா நான் கவலையில்லாம இருப்பேன்..

“பாத்துண்டே இருங்கோ லோகாம்மா, இந்த சொர்ணத்தை ஒத்தன் கையில் புடிச்சிக் குடுத்து, பெரிய பையனுக்கும் ஒரு தொழில்னு ஊணிட்டா, சிவனேன்னு வந்திருப்பேன்...” என்று கூறுகிறாள் மதுரம்.

“அது சரி, அப்ப கீழ்களை எல்லாம் என்ன பண்ணுவே? நான் அப்பவே ஆபரேஷன் பண்ணிக் கோடின்னேன், நீ இன்னும் பண்ணிக்கலே....”

“இப்ப அதெல்லாம் ஒண்ணும் கிடையாதக்கா....”

“ஆமா, நீ சொல்லி நான் கேக்கறேன்...”

“அது பண்ணிண்டா காது செவிடாப்பூடுதாம்; பைத்தியம் பிடிக்கறதாம்....”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல. சும்மாப் புரளி. உன்னைப் போல இருக்கிறவா இப்படிப் பேசிப் பேசித்தான் குட்டிச் வராப் போகிறது.”

“அப்ப நான் இப்ப போயிட்டு வரட்டுமா?..”

“சரி, பின்ன என்ன பண்றது?” 

“....எனக்கு ஒரு அம்பது ரூபாய் குடுக்கணும் நீங்க...”

“அம்மாடீ...? அஞ்சு ரூபாய்கூட எங்கிட்ட இப்ப இல்லே மன்னி ...”

“அரிசி வாங்கியே கடனாயிடறது அக்கா. என்ன வயத்தை வாயைக்கட்டினாலும் முடியல இப்பல்லாம். ஒரு இடலினாலும் போடலாமான்னு பாக்கறேன்.”

“அஞ்சுபடி அரிசி எடுத்துண்டுபோ. புடவை ரவிக்கை படுத்து வச்சிருக்கேன். சேதுவோட டிரௌசர் ஷர்ட்கூட இருக்கு, பாலாட்ட சொன்னா எடுத்துக்குடுப்ப. நீ இந்தப் பொண்ணுக்கு எல்லாம் சொல்லிட்டுபோ...”

மைத்ரேயி குளியலறையிலிருந்து சமையலறைக்கு வந்து விட்டதை மதுரம் அப்போதுதான் கவனிக்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/117&oldid=1101985" இலிருந்து மீள்விக்கப்பட்டது