பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

117

“அப்படியா? என்ன அதிசயம்! வெள்ளைக்காரன் நாள்ள கூட இதெல்லாம் வந்திருக்கலே. காங்கிரஸ்காரா காலத்தில் என்னெல்லாம் வந்திருக்கு!”

மைத்ரேயி அரிசி கழுவிக் கொடுக்கிறாள்; பருப்பு சுத்தமாக்கிக் கொடுக்கிறாள். “கவனமாகப் பார்த்துக்கோ, ஸ்...னு ஓசைவந்த உடனே வெயிட்டைப் போட்டு மூடிடனும். பின்னால வெயிட்டை ஆறவச்சுத் திறந்த பிறகுதான் மூடியைத் திறக்கணும். அதைத் திறக்காமல் மூடியைத் திறந்து தான் பாலா கையில் கட்டுப்போட்டுண்டு துன்பப்படறா. நான்தான் ரெண்டு நாள் சமைச்சேன் இதுலே...”

மைத்ரேயி பார்த்துக்கொண்டே நிற்கிறாள். அவளுக்கு எல்லாம் கனவில் நடப்பதைப்போல இருக்கிறது.

பெரிய ஸ்டவ்விலும் அழுத்தக்கலனிலும் சமைக்கும் நவீன சமையற்காரி! பொட்டின்றி, ரவிக்கையின்றி, கட்டுடலின் தோளைக் காட்டிக்கொண்டு அழுக்கு நூல் சேலையைக் கொசுவம் வைத்த முறையில் உடுத்திக் கொண்டு, கரண்டியும் சிப்பலுமாக நிற்கும் ஒரு உருவத்தைத்தான் சமையற்காரி என்ற நிலையில் அவள் சித்திரித்திருக்கிறாள். அது மதுரத்துக்கு முக்காலும் பொருந்தும்.

கோகிலாவைப் பத்துப் பாத்திரம் துலக்கும் வேலைக்காரி என்று கூற இயலுமா? அப்படி அவளும் நவீனமான சமையற்காரி.

லோகா சோறும் பருப்பும் பதமாகும் நேரத்தைக் கணக்கிட்டுக் காட்டிவிட்டுக் குளிக்கச் செல்கிறாள்.

காலை நேரத்து அலுவல்கள் பரபரப்பாகப் பொழுதைத் துரத்துகிறது.

எட்டேமுக்கால் மணிக்கு லோகா வெளியே செல்லத் தயாராக வரும்போது, சேது இரண்டாந்தடவையாகக் காபி பருந்திக் கொண்டிருக்கிறான்.

“இப்ப காபி குடிச்சா எப்படிச் சாப்பிடுவது ஒன்பது மணிக்கு?” என்று கடிந்து கொள்கிறாள். “நீயே வீணாக உடம்பை கெடுத்துக்கறே. சாப்பிடாமல் காலேஜுக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/119&oldid=1101990" இலிருந்து மீள்விக்கப்பட்டது