பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/123

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

121

வருது, கண்டிக்கிறதில்ல. நாளைக்கு அவ எவனையானும் காதலிச்சிண்டுதான் போவ. இல்லையா, சொல்லு?”

அவர் மதுரத்தை மட்டும் பார்க்கவில்லை. மைத்ரேயியையும் பார்க்கிறார்.

“சமையல் எப்படி இருக்குன்னு நீங்க சொல்லலியே?” என்று நினைவூட்டுகிறாள் மதுரம்.

“சமையல் பகு நன்னாத்தான் இருக்கு. ஆனா, இவளை எல்லாம் நாலுநாள் இங்கே தங்கவிடமாட்டா. தாம்தூம்னு பீடியைக் குடிச்சிப் போட்டுண்டு அட்டகாசம் பண்ணிட்டு வர தடிப்பசங்கதான் இங்கே தங்குவாங்க. நம்ம தலைவிதி, ருசிருசியா சாம்பார், கூட்டு, ரசம்ங்கற சாப்பாடுக்கு லாட்ரி. சோம்பு பூண்டு மசாலா எல்லா இழவையும் போட்டுத் தொலைப்பான். அதுவும் அந்த ராஜா வந்துட்டான்னா வீடு திமிலோகப்படும்... நான் கிடக்கிறேன் இங்கே, என்னை யாரு லட்சியம் பண்றா?”

மைத்ரேயியினால் ஒன்றையும் கேட்டுக்கொள்ள இயலவில்லை.

“இவளை வச்சுப்பா பாருங்கோ. அப்படியெல்லாம் போக மாட்டாள்” என்று மதுரம் ஆறுதலளிக்கிறாள்.

“அதென்னாமோ, அன்ன மயம் பிராணமயம். ஒருத்தருடைய சாப்பாடு புலனைத் திருப்திப்படுத்தறதுக்காக இல்லே. இந்த உடம்பை, உடம்பெடுத்த உன்னதமான நோக்கத்துக்குக் காப்பாற்ற வேண்டித்தான் சாப்பாடு. என்ன செய்யட்டும்? ஊருக்குப் பெரியவன்னு இவளுக்காக என்னை மத்தவா மதிக்கக் கூடாதுன்னே அந்த நாளிலேயே ஒதுங்கிட்டேன். அப்புறம்கூட என்ன? அப்பாவும் போயிட்டார், ஊரிலே நாலுபேர் நாலு தினுசாப் பேசறாளேன்னு காலில் விழுந்து அழுதாள். நமக்கும் இளகிப் போச்சு. ஊரைவிட்டு வாசலைவிட்டு இந்த மூலையில் வந்து முடங்கியிருக்கேன்.”

மைத்ரேயி இலையைப் பார்த்துப்பரிமாறுவதைத் தவிர வாயே திறக்காமல் நிற்கிறாள்.

“நான் கொஞ்சம் சாஸ்திரம் தர்மம் ஆசாரமெல்லாம் வச்சிண்டிருக்கிறவன். இங்கே வந்து அநாசாரச் சூழலைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/123&oldid=1102003" இலிருந்து மீள்விக்கப்பட்டது