பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/124

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

ரோஜா இதழ்கள்

பார்த்தால் பித்தர்ப்பணமே பண்ண முடியாம இருக்கு. இந்தத் தோட்டத்திலே மாட்டுக்கறி சமைக்கிறான், நாய்க்குப் போட. தெவசம் எப்படிப் பண்றது?”

“ஏம்மா? நீ ஸ்நானம் பண்ணாம சமைக்கப் போயிடாதே!”

“இல்லை” என்று அவள் தலையை ஆட்டுகிறாள்.

“கிரஸின் ஸ்டவ்வில் சமைச்சியோ?”

“ஆமாம்...”

“கர்மம். வாசனை சொல்றதே? எல்லாத்தையும் சாணி ஜலம் போட்டுத் துடச்சிட்டு மறுநாள் உபயோகிக்கணும். முள்ளங்கி வெங்காயம் ரெண்டும் ஏகாதசி அமாவாசையில் தள்ளுபடி. நாலுநா முன்ன இருந்துட்டுப் போனானே ஒரு பீடித்தடியன், அவன் அமாவாசையன்னிக்கு முள்ளங்கி சாம்பார் பண்ணிட்டு, முள்ளங்கியைப் பொறுக்கிவச்சிட்டுக் கொண்டு வந்தான். நான் என்ன செய்யட்டும்? ராத்திரிப் பலகாரத்துக்குப் பூரி போடறேன்னான். பாலில் நனைச்சுக் கொண்டாடான்னிருக்கேன்; மசாலா வச்சு சோமாசு மாதிரி பொறிச்சிண்டு வந்துட்டான். நான் என்ன செய்யறது? கர்மமேன்னு தின்னு தொலைச்சேன். சாப்பிடாட்டி காலையிலே மயக்கம் வந்துடும். இதெல்லாம் வீட்டுப் பெண் பிள்ளை கவனிக்கிறாளா?”

“அப்படித்தான் மாமா இருக்கும். எல்லாத்துக்குமா காசில போயி ஒரு முழுக்குப் போட்டுட்டு வந்துடுங்கோ” என்று ஆறுதல் கூறுகிறாள் மதுரம்.

“வைத்தி நேத்து வந்தானா? வரேன்னு அன்னிக்குச் சொல்லிட்டுப் போனான்.”

“அப்படியா? தெரியாதே?”

“சொல்லு. நான் பார்க்கணும்னு சொன்னேன்னு.”

“அது சரி, அவர்ட்ட உங்களுக்கு என்ன காரியமோ?”

“ஒண்ணுமில்ல. நீ லோகாட்டச் சொல்லிடாதே, அவ டாக்டர் மருந்து வயிறெல்லாம் புண்ணாயிடுத்து. வைத்தி அன்னிக்கு யதேச்சையாக வந்தப்ப அதுக்குன்னு ஒரு மருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/124&oldid=1102006" இலிருந்து மீள்விக்கப்பட்டது