பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/129

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

127

ராஜா இன்னும் அவளைத்தான் கவனிக்கிறார். நேரடியாகவே அவளிடம், “உன்பேரென்னம்மா?” என்று விசாரிக்கிறார்.

“மைத்ரேயி” என்று சட்டென்று லோகாவே கூறுகிறாள்.

“நான் நினைச்சேன் லோகா, ராதா வீட்டுச் சொந்தக்காரப் பெண் யாரோ வந்திருக்காப் போல இருக்குன்னு. ஹோம்ல சேர வந்திருப்பதாக இன்னமும் நம்ப முடியலே...”

மதுரம்தான் சொல்லிக் கூட்டிவந்திருக்கா-தாய் தகப்பன் இல்லே. அக்கா யாரோ கிழவனுக்கு மூணாந்தாரமாய்க் கட்டிக் கொடுக்க நினைச்சாப் போல. கிணற்றில் விழ வந்திருக்கிறாள்....”

அவர்கள் தன்னைப் பற்றித்தான் பேசிக் கொள்கிறார்கள் என்று அறிந்து கொள்கிறாள் மைத்ரேயி. ஆனால் விவரத்தை முழுதும் புரிந்து கொள்ள முடியாமல் இடை இடையே உள்ளே வரவேண்டியிருக்கிறது.

“இதுபோல் கீழ்தளத்தில் நடக்கலாம். உயர்வகுப்பில், இவ்வளவு மறுமலர்ச்சியும் முற்போக்கும் வந்த பின்னரும் நடக்கிறதென்பதை நம்ப முடியவில்லை...” என்று கூறுகிறான் ராஜா.

சாம்பார் சாதத்தைப் பிசைந்துகொண்டு லோகா, “எல்லா வகுப்பிலும் எல்லாம் இருக்கிறது. வறுமைதான் காரணம்” என்று மொழிகிறாள்.

“படிச்சிருக்கியாம்மா?”

அவர் கடைசியில் கூறியதற்கு லோகா மறுமொழி கொடுத்ததிலிருந்து, தன்னுடைய தவறுக்கு வறுமையைக் காரணமாக்குகிறார்கள் என்று மைத்ரேயி புரிந்து கொள்கிறாள். ஆனால் உண்மை அதில்லையே? பாலும் தயிருமாக சாப்பிடக் கூடிய வீடு அல்லவா? அவள் வீடு. ஆனால் அவர்கள் அவளை எதுவும் கேட்காதபோது அவளாகத் தலையிட்டுச் சொல்வது அவர்கள் கோபத்தைக் கிளப்பிவிடக் கூடுமே?

“எஸ்.எஸ்.எல்.சி. பாதி வரை படிச்சேன். அதை முடிச்சிடணும்னுதான் ஒரே ஆசையாக இருக்கு...” என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/129&oldid=1102029" இலிருந்து மீள்விக்கப்பட்டது