பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/131

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

129

லோகா ஒன்றும் பேசவில்லை.

“ஸாரோட திட்டம் புரிஞ்சு போச்சு. இப்ப வந்திருக்கும் குக்குக்கு இந்தத் தகுதி எல்லாம் இருக்குன்னு சொல்றார். அம்மா! இந்த நிம்மதிக்கும் ஆபத்து!” என்று கிண்டுகிறான் சேது.

“நீ எதானும் உளறாதே சேது! சாப்பிட்டாச்சுன்னா உன் வேலையைப் பார்த்துட்டு எழுந்துபோ!” என்று எரிச்சலுடன் பேசுகிறாள் லோகா. அதே வேகத்துடன் மடமடவென்று தண்ணீரைக் குடித்துவிட்டு, வாஷ்பேசினில் கையைக் கழுவிக் கொண்டு துடைத்துக் கொள்கிறாள். அநுசுயா அங்கேயே இன்னொரு சிறு மேசையின் மேல் வெற்றிலை பாக்குத் தட்டைக் கொண்டு வைத்திருக்கிறாள்.

“லோகா, என்ன அதுக்குள்ள எழுந்து போயிட்டே? மாம்பழம் சாப்பிடல?”

அப்போதுதான் மைத்ரேயி, அநுசுயா அழகாகக் கூறுகள் போட்டுவைத்த மாம்பழத் தட்டைத் தூக்கி வருகிறாள். மாம்பழக்கூடை ராஜா வரும்போது காரில் வந்தது.

“பாக்குப் போட்டுண்டேன். வேண்டாம்-”

“பாக்குத்தானே? துப்பிட்டுச் சாப்பிட்டுப்பாரு. நான் ஸ்பெஷலாச் சொல்லி பங்கனபள்ளிலேந்து தருவிச்சேன். இங்கே உங்களுக்குத்தான் கொண்டு வந்தேன். ஒண்ணு சாப்பிட்டு மாதிரி பாரு-”

“வேண்டாம் ராஜா... நான் அப்புறம் சாப்பிடுறேனே? பாக்குப்போட்டுண்டா அப்புறம் எதையும் நாக்கு ஏத்துக்கிறதல்ல” என்று மறுக்கிறாள் லோகா.

சேது ஒவ்வொன்றாகத் துண்டங்களை எடுத்து வாயில் போட்டுக் கொள்கிறான். சாவதானமாக, “ஸார் மேலே உள்ள கோபத்தை என் மேல காட்டிப் பாத்தா, இப்ப மாம்பழத்தின் மேல் காட்டறா...” என்று கிண்டுகிறான்.

“சேது! யூ ஹேவ்பிகம் இன்டாலரபிள் (you have become Intolarable)” என்று கத்துகிறாள் லோகா.

ரோ.இ - 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/131&oldid=1102709" இலிருந்து மீள்விக்கப்பட்டது