பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/133

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

131

“அது அப்படித்தான். அதைக் கண்டால் எனக்கே பிடிக்காது. அம்மா ரொம்பப் பெருந்தன்மை. அது என்னை உள்ளே நுழையவிடாது, முதமுதல்ல நான் ஒரு நாள் அதுக்குக் காப்பி கொண்டுவச்சேன். அப்ப ஊரிலேந்து வந்த புதிசு. ஏதோ பொம்பளை விவகாரத்தில் மாட்டிட்டுத்தானே அடி வாங்கிட்டாரு? அதனால தள்ளி மேசை மேல வச்சிட்டு எத்திட்டேன்.

“யே யாருடி நீ புதுசா இருக்கியே? அங்கியே வச்சிட்டு பொனா என்ன அர்த்தம்!”ன்னாரு.

நான் மேசையை நகர்த்திப் போட்டேன். “துண்டு கொண்டா”ன்னாரு, கொண்டாந்தேன்.

“அப்படி வச்சிட்டு நில்லு. நான் சாப்பிட்டாப்புறம் கை கழுவித் துடைச்சப்பறம் சுத்தம் பண்ணி எடுத்திட்டுப்போ!”ன்னாரு.

“ந்தாய்யா? அந்த வேலையெல்லாம் ஏங்கிட்ட வச்சுக்காதே உக்கும்”ன்னு முறைச்சேன்.

அந்த ஆளு அப்ப தரக்குறைவாகப் பேசத் தொடங்கிட்டாரு. நான் அதுக்கப்புறம் போறதில்ல. கோகிலாங்கிட்ட போயி, பறச்சாதியெல்லாம் உள்ளே வந்து தொடச் சொல்றா. நீ அம்மாட்டச் சொல்லிடு. நான் இனிமே அவ தொட்டா சாப்பிடமாட்டேன்னு..... கோகிலா அம்மாகிட்டச் சொல்லாம ஏங்கிட்டச் சொன்னா.

நான் அப்புறம் அந்தப் பக்கம் போறதில்லை. பாலா போய்க் காப்பி குடுக்கும், சோறு கொண்டுவைக்கும். வைக்கலேன்னா இங்கே வந்து கன்னா பின்னான்னு அம்மாளைத் திட்டுவொரு. அம்மா அதுக்கு அஞ்சி நம்மையே கொண்டு வைக்க செல்லி விரட்டுவாங்க.”

“தமாஷ்தான்-”

“அந்தாளு மகாமட்டமான ஆளு, அந்தக் காலத்தில் சொத்து வெளியே போகக்கூடாதுன்னு கட்டி வச்சிட்டாங்க.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/133&oldid=1102837" இலிருந்து மீள்விக்கப்பட்டது