பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/137

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

135

“உன்னைப் பார்த்ததும் சொன்னால், உனக்குத்தான். நீ என்ன இருந்தாலும் உசந்த சாதி; அழகு. ஆனா, உங்களை ஒத்தவங்க எங்கேனாலும் வீட்ல வேலைக்குப் போனாலும் கஷ்டம். பர்வதம் பாரு, ஒரு பெரிய கிரிமினல் லாயர் வீட்ல வேலைக்கிருந்த பொண்ணுதான். லாயரே அந்தக் குழந்தைக்கு அப்பாவோ, அவருடைய மகனோ. இரண்டாம் பேரறியாம ஹோமுக்கு வந்துட்டது. பிரசவம்னா ஆசுபத்திரிக்குப் போகும். இங்கே குழந்தை அம்மா ரெண்டு பேரும் இருப்பாங்க. தாமரை குளத்து மீன் ருசியாத்தானிருக்கும். ஆனா தாமரைக் கொடி, சேறு இதை எல்லாம் சமாளிச்சாத்தான் மீன் பிடிக்கலாம்...” என்று அவளுக்குத் தெரியாத விவரங்களைக் கூறுகிறாள் அநுசுயா.

“தாமரைக் குளத்து மீன் ருசியாயிருக்குமா? தெரியாது எனக்கு!” என்று சிரிக்கிறாள் மைத்ரேயி.

“அப்டீன்னு எங்க தாத்தா சொல்லுவாரு. எனக்குக் கனாப்போல இருக்கு. தாமரைக் குளத்திலே வருசத்துக் கொருக்கா மீன் ஏலம் விடுவாங்க. எங்க தாத்தா வாங்கி யாருவார். அவரே குழம்பும் வைப்பார்...”

“உனக்கு வைக்கத் தெரியுமா?”

“மசாலை அரைச்சுக் குடுப்பேன். அப்பனை எனக்கு நினைவு தெரியுமுன்னே யாரோ கொலை செஞ்சிட்டாங்க. விவரமெல்லாம் நல்லாத் தெரியாது. நானா யூகிக்கிறேன் எங்கம்மா விவகாரமா இருக்கும்னு. அந்தாளு ஆறுவருசமோ என்னமோ ஜெயில்ல இருந்திட்டு வந்தப்ப, எங்கம்மா கடைக்குப் போயிட்டு வாரேன்னு கேவுரு முட்டையைத் தலையில் வச்சிட்டுக் கிழக்கால போனா வரவேயில்ல. நான் அழுதிட்டே இருந்ததும், தாத்தா என்னைக் கையிலே புடிச்சிட்டு ஊர் ஊராத் தேடிட்டு வந்ததும் நினைப்பிருக்கு. தாத்தாதான் என்னைப் பேட்டை அரிஜன இல்லத்தில் கொண்டாந்து சேர்த்தார். “கேடு கெட்டவன் கொலைகாரப் பயல், அவளை புடிச்சிட்டுப் போயிட்டான்னு திட்டினாரு. அப்ப எனக்குப் புரியல. பின்னால நானா நினைச்சுப் பாத்துப்பேன். தாத்தாவை நான் பிறகு பார்க்கலே. அவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/137&oldid=1102844" இலிருந்து மீள்விக்கப்பட்டது