பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/139

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

137

“உங்க சாதியில் எல்லாரும் நல்லாயிருக்கிறீங்க, உங்களுக்குப் படிப்பு வருது. நான் காந்தி இல்லத்து ஹைஸ்கூலில்தான் படிச்சேன். முதல் மார்க் வாங்குகிறது அநேகமா உங்களவங்க பிள்ளைங்கதான். எனக்கு எட்டாவதிலியே மூணுதரம் தவறிப் போச்சு. படிப்பை நிறுத்திட்டு கைவேலையிலே போட்டாங்க. பிறகு இங்கே வந்து சேர்ந்தேன்...”

“படிச்சிட்டாப் போதுமா அநு?”

“ஏன், எல்லாம் அநேகமாப் படிச்சி எப்படியோ பெரிய வேலைக்குத்தான் போறாங்க. எந்த ஐயரானும் மூட்டை தூக்கறாரா? எந்த ஐயரேனும் டவாலி போட்டுட்டுப் பியூன், இதுபோல வேலைக்குப் போறாங்களா. மதுரத்தம்மா புருஷனுக்கு அம்மா எதோ வேலை போட்டு வைக்கலான்னு சொன்னாங்க போலிருக்கு. ஒருநா நானிங்க இருக்கையிலே, நான் மேசைக்கு மேசை எச்சித்தட்டு தூக்கற பயல்னு நினைச்சியோ ஓட்டல்ல வேலைன்னா அப்பிடி இல்லே! சரக்கு மாஸ்டர்னா எச்சி கழுவும் வேலையில்லன்னு கத்தினாரு. அது உசந்த சாதின்னுவர பேச்சுத் தானே ?” என்று கேட்கிறாள் அது.

“சேச்சே, அவங்கல்லாம், உண்மையில் உசந்த சாதி இல்லே...”

“அப்படி நீ சொல்லலாம். எல்லாரும் சொல்லுறதில்லையே ?”

“படிப்பு வர்றதனால உசந்த சாதி இல்லே, படிப்பு வராததுனால தாழ்ந்த சாதியுமில்ல. இது விஷயமா ஆராய்ச்சி பண்ணணும்னு எனக்கு ஆசை. யார் யாருக்கு அநீதி பண்ணினாங்க, எப்ப, எதுக்கு எல்லாம் தெரிஞ்சுக்கணும்னு ஆசை.”

“தெரிஞ்சிட்டு என்ன செய்யப் போறே?”

அவள் கேலியாகச் சிரிக்கிறாள். அந்தக் கேலி இமயமலை கல்லா மண்ணா என்று ஆராய்ச்சி செய்து எலிக்கு என்ன ஆக வேண்டும் என்று கேட்பதுபோல் இருக்கிறது.

உண்மையில் அந்தச் சாதியில் பிறந்திருப்பதனால் அதற்கு நேரும் அவமானம் முழுவதையும் தானே தாங்கிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/139&oldid=1102848" இலிருந்து மீள்விக்கப்பட்டது