பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/147

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

145


இரவு முழுவதும் பயங்கரக் கனவுகளிடையே திடுக்கிட்டுத் திடுக்கிட்டு விழிக்கும் அவள் அரைமணிகூட முழுதாக உறங்கியிருக்கவில்லை. அதற்குள் மணி ஐந்தடித்து விடுகிறது. அவளை ராசம்மாதான் வந்து எழுப்புகிறாள்.

“எந்திரு, மணி அஞ்சடிச்சாச்சு. கைகால் முகம் கழுவிட்டு, பிரேயருக்குப் போகோணும்.” ராசம்மாள் கோயமுத்துரைச் சேர்ந்தவள் என்பதை அந்தப் பேச்சு காட்டிக் கொடுக்கிறது.

“பிரேயரை மிஸ் பண்ணினா, பிரேக்ஃபாஸ்ட் மிஸ்ஸாகும்..” என்று அந்த அறை வழியே போகும் பெண்களில் ஒருத்தி அவளை விசித்திரமாக உற்றுப் பார்த்துக் கூறிக் கொண்டு போகிறாள்.

நான்கு குளியலறைகளும் மூடியிருக்கின்றன.

இருபத்திரண்டு பெண்கள் காச்சுமூச்சென்று கத்திக் கொண்டு அங்கே கூடியிருக்கின்றனர்.

“வாஷ்பேசினில் காறிக் காறித் துப்பிட்டு ஒரு மூதேவி அலம்புறதில்லே. இங்கே வேலைசெய்ய நம்மால முடியாது ராமசாமி!” என்று திட்டிக் கொண்டே ஒருத்தி எம்பி எம்பிப் பம்படிக்கிறாள். அவள் குட்டையாக பருமனாக இருக்கிறாள்.

“சாம்பலைத் தொட்டுப் பல்லு விளக்கறதுக்கு வாஷ் பேசின் என்னா கேடு? பின்னாடி சாக்கடையில் உமுஞ்சா என்ன ?”

“பெரிய மகாராணி ரூல் போடுறா” என்று நிதானமாகக் கூறிக்கொண்டு ஒருத்தி ‘வாஷ்பேஸினி’ல் வேண்டுமென்றே காறி உமிழ்கிறாள்.

“ஏ பொறம்போக்கு! உங்கப்பன் முப்பாட்டன் கட்டி வச்சதுன்னு நினைப்போ? அது சொல்லுதே காதிலே வுழலே?” என்று இன்னொருத்தி துப்பியவளின் காதைப் பிடிக்கிறாள்.

“ஐயோ ஐயோ” என்று அலறும் அவள் கோபம் கொண்டு, “எங்கப்பன் முப்பாட்டன் கட்டி வய்க்கில, உங்க

ரோ.இ-10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/147&oldid=1102886" இலிருந்து மீள்விக்கப்பட்டது