பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/149

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

147

கும் ஒரு குட்டையிருந்தால் அதனருகில்தான் உட்காருபவனாக இருக்கும்.

அப்போது ஒரு குளியலறைக் கதவு திறக்க, பர்வதம் வருகிறாள்.

“குட்மார்னிங் மிஸ் பர்வதம் சோம சேகர்!” என்று குறும்பு காட்டுகிறாள் ஒருத்தி.

“உன் சோற்றில் மண்விழும். பெரிய இடத்து சம்பந்தக்காரங்களை நீ கேலியா பண்றே? கசுமாலம்!” என்று இன்னொருத்தி குத்துகிறாள்.

“சே, சே, பர்வதம் பிரசவத்துக்கு ஆஸ்பர்ன் நர்ஸிங் ஹோமுக்குப் போகப் போகுதாம். ஒருநாள் ரூம் நாற்பதஞ்சு ரூபாய், குளுகுளு ரூம்..... இல்லையா பர்வதம்” என்று கிண்டுகிறாள் முழங்கால் கவுன்காரி ரோஸி.

“யாருக்குக் கட்டியிருக்கிறாரோ, அந்தப் பெரிய மனுசன் இவ ஒருத்திக்குத்தான் இப்ப மாசமா?”... என்று கிளுக்குகிறாள் மற்றொருத்தி.

“சீ, ஏண்டி கையாலாகாத பேச்சுப் பேசறீங்க ? பர்வதம், நான் உனக்கு ஒரு யோசனை சொல்றேன். அந்தப்படி நீ செஞ்சா, பொம்பிள.”

“பொம்பிளைங்கறதை வெளக்கத்தான் சுமந்துகிட்டுக் காட்டுறாளே! நீ வேறே நிரூபிக்கச் சொல்லணுமாக்கும்! சீ! இது பொம்பிளத்தனமா? ஆம்பிளத்தனம். இந்த ஆம்பிளை எல்லாம் தயிரியம்னு உனக்கு நினைப்போ ?”

“பர்வதம், நான் ரொம்ப நாளைக்கு முன்ன பாத்தேன் சினிமாவில. அப்ப எனக்குப் பன்னண்டு வயசிருக்காது. ஒரு ராஜகுமாரன் ஒரு பொண்ணுட்ட அடாவடியாப் பேசுகிறான். அவ மொறச்சுக்கிறா. அவளை இட்டாந்து கலியாணம் கட்டிக்கிட்டு உள்ளாறபோட்டு, உனக்குப் பிள்ளை வேணுமான்னு ஒருமரப்பாச்சிப் பொம்மையக் குடுத்துட்டு வெளியேவந்து...” என்று முடிக்குமுன் ராசம்மா, குறுக்கிட்டு, “மங்கம்மா சபதம்... நல்லாருக்கும் முத்தம்மா, அந்தச் சினிமா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/149&oldid=1102912" இலிருந்து மீள்விக்கப்பட்டது