பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/150

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

ரோஜா இதழ்கள்

நானு எட்டுவாட்டி பார்த்தேன், எங்கூட்டுக்காரரோடு, அத்தெ” என்று பெருமையாகக் கூறுகிறாள்.

தொடர்ந்து, “இதுபோல இப்ப எங்க சினிமா வருது ஆயா, அதுல வசுந்தரா வந்து இன்னனா ஆடுவா, பாடுவா, என்னெஸ் கிருஷ்ணன் மதுரம்...” என்று பிரலாபிக்கிறாள்.

“இப்ப ஆடல் பாடல்லாம் வேணாம் ராசம்மா, நீ ஒண்ணு...” என்று முத்தம்மா நெற்றியைச் சுளிக்கிறாள். “ஆனா, அந்தப் பொம்பிள மாதிரி அவ பையன் கையிலியே ஒரு சவுக்கைக் கொடுத்து அந்தப் பங்களா அப்பனைச் சபையில் வச்சுவளாசச் சொல்லணும். யாருனாச்சும் இத்தைச் செய்வாங்களா?” என்று சவால் விடுவதுபோல் கேட்கிறாள்.

“எங்கே? பொறக்கிறது பொண்ணா இருந்து தொலைஞ்சிச்சின்னா?” முத்தம்மாள் இப்போது கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறாள்.

“அது பொம்பிளையாத்தான் இருக்கணும். அவ கையில தான் சாட்டையைக் குடுக்கணும். பருவதம், நீ ஒரு அழகான பொண்ணப் பெத்து எங்கிட்டுக் கொடு. நாவளக்கிறேன். நீங்கல்லாம் சொம்மா, அரிசியும், கீரையும் தின்னுட்டு ஆம்பிளையக் கண்டா கரைஞ்சு போவீங்க. பளார் பளார்னு ஆளுக்குப் பத்து சவுக்கடி வாங்கினால் தான் என்னாண்ட வரலாம்னு சொல்லி அந்தப் பொண்ணைவுட்டே வஞ்சம் தீத்துக்கச் சொல்லிக் கொடுப்பேன். அதான் வழி!” என்று முழக்குகிறாள். ‘ஹோ’ என்ற சிரிப்பொலி தொடர்கிறது.

மைத்ரேயி ஊமையாய் நிற்கிறாள். குருதி வழிந்த நெஞ்சம் கெட்டியாகிக் கனக்கிறது.

முதல் நாளிரவிலிருந்து இவர்களை எல்லாம் வெறுத்தாளே? இங்கே அடைந்து கிடக்கும் இந்தப் பெண்கள் வெவ்வேறு விதங்களான கதைகளுக்கு நாயகிகளாக இருப்பார்கள். ஆனால் இந்தக் கதைகளின் மூலக் கருத்து ஒன்றே. காலம் காலமாகப் பெண் ஆணின் கொடுமைகளுக்கும் நயவஞ்சகப் போர்வைக்கும் தலை குனிந்தே வருகிறாள். அவள் எதிர்த்து நின்று சுயமாகத் தன்னைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/150&oldid=1102919" இலிருந்து மீள்விக்கப்பட்டது