பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/152

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

ரோஜா இதழ்கள்

பெருமான்; கணநாயகர்; இராமகிருஷ்ணர்; சாரதாமணி; விவேகானந்தர் ஒரு வரிசை. காந்தியடிகளும் கஸ்தூரிபாவும்...

தாமரைப்பூக்கோலம் என்றோ போட்ட மாக்கோல மாகத் தோன்றாமல் சிவப்புத் தரையில் புத்தம் புதியது போல் பளிச்சிடுகிறது.

கையில் நோட்டுப் புத்தகத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு வள்ளி பாடுகிறாள்.

குரல் மிக இனிமையாக இருக்கிறது.

முதலில் கஜவதனா என்ற பாடலைப் பாடுகிறாள். தொடர்ந்து நாமாவளி சொல்கிறாள். எல்லோரும் சேர்ந்து இசைக்கின்றனர்.

கட்டைக்குரல், கீச்சுக்குரல், மென்குரல் எல்லாமாக இணைந்து ஒலிக்கையில் மனசுக்கு இதமாக இருக்கிறது. அடுத்து புத்தகத்தைப் பார்த்து, கீதையின் சாங்கிய யோகத் தமிழாக்கத்தைப் பங்கஜம் முறை வைக்கிறாள். மற்றவர்களுக்கு அது நன்றாகப் பாடமாயிருக்கிறது, மைத்ரேயிக்குத் தெரியாததால் எல்லோருடைய வாயசைவுகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறாள். முழங்கால் பாவாடைக்காரியும் இந்த பஜனையில் கலந்து கொள்ளாமல் தனியே அமர்ந்திருப்பதை அப்போது தான் மைத்ரேயி கவனிக்கிறாள். ஒருகால் அவளும் புதுசோ? கீதை முடிந்ததும் முழங்கால் பாவாடைரோஸி, நெஞ்சைத் தொட்டு, தோள்களைத் தொட்டு, நெற்றியைத் தொட்டு சிலுவைக் குறி செய்து கொள்கிறாள்; “lead kindly light” என்ற ஆங்கிலப் பாடலை அவள் ஒருத்தி மட்டும் பாடுகிறாள். கட்டுப்பாடுகள் உடனே தகர்ந்து போகின்றன. எல்லோரும் எழுந்திருப்பதைப் பார்த்த அநுசுயா, “ஏன் மெடிடேஷன் இல்லையா இன்னிக்கு?” என்று கேட்கிறாள்.

அதற்கு முத்தம்மா அவளை முறைத்துப் பார்த்து, “ஏன் காதலர்களை எல்லாம் தனிச்சு நினைக்கனுமோ? போடி பாசாங்கு” என்று ஏசுகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/152&oldid=1102936" இலிருந்து மீள்விக்கப்பட்டது