பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/157

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

155


“மைத்ரேயி...”

“கல்யாணமாயிருக்குதா ?”

‘உம்...?”

“புருஷன் செத்துவிட்டானா?”

மைத்ரேயியை அந்தக் கேள்வியிலுள்ள வறட்சி தூக்கிவாரிப் போடச் செய்கிறது.

அவளையுமறியாமல் இல்லை என்று தலையாட்டு கிறாள். g

“பின்னே ? அடிச்சி நடுத்தெருவில் துரத்திட்டானா?”

“அதுவுமில்லே...”

“பின்னே...?”

அவள் கதையை அறிவதில் அவளுக்கொன்றும் சுவாரசியமோ இளக்கமோ இல்லை. பொறுமையைச் சோதிக்கக் கூடாது.

“நான் ஏமாந்து போய்விட்டேன்.”

மைத்ரேயிக்கு மடைதிறந்தாற்போல் கண்ணிர் பெருகு கிறது.

“நான்சென்ஸ். இப்ப ஏன் அழறே பின்ன கல்யாணமாச்சுன்னே ?”

“கல்யாணம்னுதான் பண்ணிட்டோம்.”

“பின்ன ஏன் இங்கே வந்து கழுத்தறுக்கிறே? கல்யாணம் பண்ணிட்டான்னா ஏன் ஏமாத்திட்டான்னு பழி போடு கிறே?” என்று அதட்டிவிட்டு, கல்யாணமானவள் என்று எழுதியதை பட்டென்று அடிக்கிறாள். வேறு எப்படியோ எழுதுகிறாள். மைத்ரேயிக்கு அவள் தன் உச்சந்தலையில் எழுதியதையே அடித்துவிட்டு அலட்சியமாகக் கிறுக்குவது போல் தோன்றுகிறது.

“சரி, போ! உனக்குப் புடவை, பாய், தலையணை, சாப்பாட்டுத் தட்டு, குவளை எல்லாம் கொடுக்கச் சொல்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/157&oldid=1102958" இலிருந்து மீள்விக்கப்பட்டது