பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/165

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

163

கட்டுப்பாடுகளுக்குட்பட்டு ஒழுங்கான வாழ்க்கைக்குத் திரும்பும் அவர்களுக்கு அக உணர்வுகளும் சீராகி நன்னெறி காண அவள் உதவுகிறாள். சென்ற ஒராண்டுக் காலமாகத் தான் ஞானம்மா அங்கு வருவதாகச் சொன்னார்கள்.

அவளைப் பார்க்கையில் தன் உணர்வுகளெல்லாம் குவிந்து ஒருமுகமாவதாக மைத்ரேயிக்குத் தோன்றுகிறது. பளிங்குக் கண்ணாடியை நினைப்பூட்டும் பொன்முகம். ஆழ்ந்த தடாகம் போன்ற கண்கள். அவளுடைய வயசின் முதிர்ச்சியை நரைத்துப் போன பசையற்ற கூந்தல்தான் வெளியிடுகிறது. சதைப்பற்று இல்லாத உயர்ந்த உடல்வாகு. எதேனும் படிக்கும்போது மட்டும் அவள் கைப்பையைத் திறந்து கண்ணாடி எடுத்து அணிவதனால் அவளுக்கு நாற்பது வயசிருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது. செவிகளில், கைகளில், கழுத்தில் கடிகாரம் தவிர ஒரு அணி கிடையாது. மெல்லிய கோடுகளிட்டோ, வெறுமையாகவோ, கடுகு மஞ்சள், அல்லது பாலேடு நிறங்களில் சேலை உடுக்கிறாள். வெள்ளைச் சேலையும் விலக்கில்லை. நெற்றியில் பளிச்சென்ற குங்குமம். அவள் கைம்பெண்ணல்ல என்று காட்டிக் கொடுத்து விட்டு மெள்ளச் சிரிக்கிறது

மைத்ரேயிக்குச் சனிக்கிழமைகளில் அநேகமாகப் பள்ளியில் தனி வகுப்பு இருக்கும். பள்ளி இறுதியாண்டானதால் சனிக்கிழமையை, ரோஸ்லீனையும் மீனாட்சியையும் போல் அவளால் விடுமுறையாக அனுபவிப்பதற்கில்லை. அன்று பள்ளி பஸ்ஸும் வராது. எனவே அவள் நகர பஸ்ஸைப் பிடித்து, ஓரிடத்தில் இறங்கியபின் சிறிது தொலைவு நடக்கவேண்டும். அதற்குச் சில்லறை ராசம்மாள் கொடுக்கிறாள். எது எப்படியானாலும் அவள் ஞானம்மாவின் வகுப்புக்கு வந்துவிடத் துடித்துக் கொண்டிருக்கிறால் பிரார்த்தனைக் கூடத்தை அவளே பெருக்கி, ஓரத்தில் சிறு மேசையும் நாற்காலியும் அவளே போடுகிறாள். குடுவையில் நல்ல மலர்களைப் பறித்து வைக்கிறாள்; நல்ல மேசை விரிப்பை விரித்து வைக்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/165&oldid=1103810" இலிருந்து மீள்விக்கப்பட்டது