பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

ரோஜா இதழ்கள்

கொள்ளாமல் மீள்கிறாளா? இல்லாவிட்டால் தன்னைத் தானே அவள் காப்பாற்றிக் கொள்ள மாட்டாளா?

“எனக்கு நீங்கள் சொல்வது சரியாகப் படவில்லை, மேடம்!” என்று எழுந்து நிற்கிறாள் மைத்ரேயி,

“ஓ...நீ வந்துவிட்டாயா? சாப்பிட்டாச்சா, அதற்குள்?”

“உம்...”

“என்ன சாப்பிட்டாய், சொல்!”


மைத்ரேயி சிறிது நேரம் விழிக்கிறாள். காலையில் அன்றையச் சமையல் என்னவென்ற திட்டத்தை அவள் கேட்கவில்லை.

எனினும், “பாகற்காய் சாம்பார்; கருணைக்கிழங்குக் கூட்டு” என்று ஏதோ நினைவில் கூறி வைக்கிறாள்.

யாரோ ஒருத்திகளுக்கென்று சிரிக்கிறாள். மீனாட்சி, “இன்னிக்கு பீர்க்கங்காய்கூட்டு, வெண்டைக் காய் சாம்பார்!” என்று அறிவிக்கிறாள்.

“ஒரே வழவழ... அதான் நெஞ்சில் நிக்காமல் முழுங்கியிருக்கிறாய். ஆனா, பாகற்காய்க்கும் வெண்டைக்காய்க்கும் வித்தியாசம் தெரியலே , உனக்கு ?”

மைத்ரேயி மறுமொழியின்றி நிற்கிறாள்.

“பசிக்கு பாகற்காயும் கசப்பல்ல; வெண்டைக்காயும் வழவழப்பல்ல” என்று தொடங்கி ஞானம் காந்தியடிகளின் உணவுக் கொள்கையைப் பற்றி விவரிக்கிறாள். “அவர் ஒரு முறை பாகற்காயையும் வெண்டைக்காயையும் கீரையையும் வேகவைத்து அதை ஆட்டுப்பாலில் கலந்து புசித்தாராம். அருகில் இருந்த நண்பரையும் அந்த உணவை ருசிக்கச் செய்தாராம். உணவு உடலுக்கு ஊட்டம் அளிக்கிறது; ஆனால் அந்த ஊட்டம் ஆன்மாவைத் துலங்கச் செய்யும் நோக்குடையதாக இருக்க வேண்டும். உடலின் தேவைகளை மிகுதியாக்கக் கூடிய சுவைகளை வளர்ப்பது மனிதனின் நல்வாழ்வுக்கு இடையூறு செய்வதாகும். நாவுசுவைக்க, மக்களுக்கு மசாலைப்பொருள் சேர்த்தும் எண்ணெயில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/172&oldid=1100696" இலிருந்து மீள்விக்கப்பட்டது