பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

ரோஜா இதழ்கள்


“அதெப்படி மேடம் ? ஒரு பெண் கண்ணுக்கு அழகாக இல்லைன்னா கல்யாணமாகிறதில்லே, பணம் காசு இருப் பவர்கள் கட்டிக் கொடுத்து வாழ்வை விலைக்கு வாங்க முடியுது. நல்ல நகை, சேலை இல்லாம எப்படி..?” என்று கேட்கிறாள் பங்கஜம்.

“பணத்துக்காகவும் நகைக்காகவும் மணம் செய்து கொள்பவர்களின் வாழ்வு உண்மையில் எப்படி அமைதியும் ஆனந்தமும் கூடியதாக இருக்க முடியும்? முதலில் பெண் இம்மாதிரி ஆசைகளை விட்டொழித்தால் வரதட்சிணை போன்ற கொடிய வழக்கங்கள் கூடக் குறையும். அற்ப ஆசைகளினால் எத்தனை சிதைவுகள் ஏற்படுகன்றன? சிறு வயசில், கவடு புரியாத பருவத்தில் பூவும் பொலிவும் மகிழ்ச்சி யைக் கொடுக்கின்றன. அதை அனுமதிக்கலாம். அதுவே வயசாகும் போது பேராசையும் சுயநலமும் பெறாமையுமாக உருவெடுக்க விடக்கூடாது. எனக்குத் தெரிந்த ஓரிடத்தில் ஒரு குடும்பத் தலைவன் பெண்சாதியின் நகை, சேலை, ஆடம்பர ஆசையினாற் இலஞ்சம் வாங்கிப்பழகி, உண்மை வெளிவரும் நேரத்தில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறான். பெண்ணே, உன்னுடைய வாசனைகளும், வண்ணங்களும் மனசிலிருக்கும் நேர்மையான அன்பிலிருந்து பிறக்கவேண்டும். ஒரு ஆட வனைக் கவருவதற்காக நீ உன்னை அலங்கரித்துக் கொள்ளாதே” என்று காந்தியடிகள் கூறுகிறார்.

“அது எப்படீம்மா? ஒருநாள் வெளியே போனாக்கூட வெளியே கடைவாசலில் தென்படும் துணியிலெல்லாம் ஆசை வரத்தான் வருது. அது எப்படி வராமலிருக்கும் ?” என்று கேட்கிறாள் புவனா.

“அப்ப பூ வைக்கக்கூடாது; பொட்டு வைக்கக்கூடாது. நல்ல சேலை உடுத்தக் கூடாதா?” என்று கேட்கிறாள் பங்கஜம்.

“கூடாதென்று சொல்லவில்லையம்மா. எளிமையான இயல்பு ஒரு அழகு; இனிமையான பேச்சும், கவடற்ற மனசும், அன்பும் தியாகமும் பிறக்கும் உள்ளம் கொடுக்கக்கூடிய அழகை, செயற்கையாக ஆடம்பரப் பொருள்களைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/174&oldid=1100704" இலிருந்து மீள்விக்கப்பட்டது