பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

175

இன்று கல்வி கற்றுப் பலதுறைகளிலும் பணியாற்றும் பல பெண்களுடன் நான் பழகுகிறேன். நூற்றுக்கு அறுபதுபேரும், தங்கள் சொந்த விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளப் பொருள் வேண்டியே பணி செய்கிறார்கள் என்பதை அறிய மனம் குன்றுகிறது. படித்த பல பெண்டிரிடையே படிக்காத எளிய கிராமத்துப் பெண்களிடம் உள்ள பண்பாடுகூட இருப்பதில்லை என்பது வருந்தத்தக்கது. காந்தியடிகள் தாமே தம் மனைவியை அடிமைபோல் நடத்தியதை எண்ணி வருந்தி இருக்கிறார். பெண் விடுதலையை உண்மையிலேயே அநுபவப்பூர்வமாக உணர்ந்து அவளுக்குப் பெருமதிப்புக் கொடுக்க முன்வந்தவர் அடிகள். நீயே இதைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம்...”

முத்தம்மாளும் பங்கஜமும் புவனாவும் படபடவென்று கைதட்டத் தொடங்கித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கின்றனர். அவர்கள் இதற்குமுன் கைதட்டி ஆரவாரம் செய்ததில்லை; கேள்விகளும் கேட்டதில்லை. மைத்ரேயி வந்த பிறகு இந்த வகுப்புக்களே ஆர்வம் மிகுந்ததாக மாறியிருக்கின்றன. ஆனால் ரோஸியும் மீனாட்சியும் மட்டும், “அவ ஒரு ‘பிராமின்', அந்தம்மாவும் பிராமின் அதனால்தான் தூக்கிவைக்கிறாள்...” என்று பொருமுகின்றனர்.


10

கரில் காங்கிரஸ் கண்காட்சியும் கலை விழாக்களுமாக மக்களை விடுமுறைக் காட்சிகளுக்குக் கவர்ந்திழுக்கும் டிசம்பர் மாசம். அந்த இல்லத்தின் ஆண்டுவிழா. அதோடு, அந்த இல்லத்தில் செய்த கைவினைப் பொருள்களை எல்லாம் கொண்டு வைத்து, சமுதாயத்தின் ஒரு பெரிய சாபக்கேடு போன்ற பிரச்னையை அவர்கள் மாற்றிவைக்கச் செயல்படும் இல்ல நடவடிக்கைகளை எடுத்தியம்பும் சித்திர விளக்கங் களையும் கொண்டு அலங்கரிக்க, அவர்களுக்கென்று கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/177&oldid=1123737" இலிருந்து மீள்விக்கப்பட்டது