பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

177

தன் குரல் ஒலிப்பதுபோலும் அவள் பொற்கனவுகளில் மிதக்கிறாள்.

இல்லத்திலிருந்து பிரார்த்தனைக் கூடத்துக்கு வரும் வெட்ட வெளியில் ஒரு சிறுமேடை அமைத்து, அதில் அவனை வரவேற்க ஏற்பாடு செய்கின்றனர். அந்த வெளி முழுவதும் துப்புரவாகப் பெருக்கிச் சுத்தம் செய்கின்றனர். வரும் நடையெல்லாம் தோரணங்கள். மாடியிலுள்ள அறையில் பெரிய மேசையிலமர்ந்து குழுவினருடன் தேநீர அருந்துவான். பிஸ்கோத்து, வறுத்த முந்திரிப் பருப்பு, தோல் ஒட்டி நிற்காத குடகாரஞ்சு, ஆப்பிள் முதலிய பண்டங்களை வாங்கி அங்கேயே அலமாரியில் வைத்திருக்கிறார்கள்.

ரூப்குமாரைப் பார்க்கப்போகும் கிளர்ச்சியில் ஒவ்வொருத்தியும் அதையே பற்றிப் பேசுவதை மைத்ரேயி செவியில் போட்டுக் கொள்ளவில்லை.

கண்காட்சி வேலைகளை முடித்துவிட்டு, அவள் பள்ளிப் பரீட்சைக்காக மும்முரமாகப் படிக்கிறாள்.

முதல் நாள் மாலை, அவள் கூடத்து மூலையில் அமர்ந்து ஒரு கணக்கைப் போட்டுப் போட்டு அடித்துக் கொண்டிருக்கிறாள். கூடம் முழுவதும் துணி, நூல் துண்டு களும் சாயங்களும் பசையும், பெண்களின் அரட்டையுமாக இரைபடுகிறது. மறுநாள் அந்த நடிகருக்குப் போடப் பெரிய மாலை ஒன்று தயாரிக்கின்றனர். அது பூமாலையுமல்ல; காகித மாலையுமல்ல, நூல்களைப் பூக்கள் போல் கத்திரித் தும் சாயமேற்றியும் மிக நேர்த்தியாக உருவாக்கிய மாலை. அத்தகைய மாலை அந்த இல்லத்தின் சிறப்பான கைவினைப் பொருள். அந்த மாலையை அந்நிய நாட்டுச் செலாவணிப் பொருளாக்கலாம் என்று நர்மதா சொல்வது வழக்கம். அப்போது அந்த இல்லமே பெரிய கைத்தொழிற் கூடமாக மாறிவிடுமாம். அந்த மாலையை முடித்து, அவர்கள் அழகு பார்க்கின்றனர்.

யாரும் எதிர்பாராவிதமாக, பங்கஜம் அதைத் தன் கழுத் தில் போட்டுக் கொண்டு ஆடுகிறாள்; பாடுகிறாள். வாட்ட

ரோஇ - 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/179&oldid=1100623" இலிருந்து மீள்விக்கப்பட்டது