பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

179

எனவே அந்தக் கூடத்திலிருந்தே அகன்று, உணவுகொள்ளும் தாழ்வரையில் சென்று தன் கணக்கைப்போடுகிறாள்.

அவாகளே கத்தியும் பேசியும் ஒய்ந்து போகிறார்கள். பா_காலையில் எதை நினைக்கவும் நேரமில்லாத பரபரப்பு.

காலை எட்டுமணிக்குள் எல்லோரும் நீராடித் துய்மை பெறு, கஞ்சி மடிப்புச் சீருடைச் சேலையில் வரிசையாக நிற்கிறார்கள். கைகளில் தட்டு விளக்கேந்தி அவர்கள் ரூப்குமாருக்கு வரவேற்புக் கொடுப்பதை செயற்குழுவின் உறுப்பினர்களான நர்மதா, மிஸஸ் சிவநேசன், ஆயிஷாபேகம், இந்திராகுமார் ஆகியோர் வந்து ஒத்திகை பார்த்துவிட்டுப் பாகிறார்கள். காத்துக் காத்து அலுத்த பின் பதினோரு மணியளவில் படகுக் கார் வருகிறது. ரூப்குமாரின் இருமருங்கிலும் மிஸஸ் சிவநேசனும் நர்மதாவும் அணைந்தாற் போன்ற நெருக்கத்துடன் காரைவிட்டிறங்கி புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுக்கின்றனர். அவர்களுடைய ஒப்பனை மைத்ரேயிக்குக் கண்களைக் குத்துகின்றன. மிஸஸ் சிவநேசன் தான் ஒல்லியாக வேண்டும் என்ற முயற்சியைக் கைவிட்டாலும், முன் புறத்தையும் பின்புறத்தையும் நான்கு விரல் அளவே வரும் அகலத்துக்கு மறைக்கக் கச்சை அணிந்தாற் போல் கையில்லாத சோளி அணிந்திருக்கிறாள். நர்மதாவோ, பூரண கும்பங்கள் மேனியிலேயே தெரியும்படியான மெல்லிய துகிலணிந்திருக்கிறாள். அவள் சட்டென்று ஒரு பெண்ணிடமிருந்து தீப ஆராதியை வாங்கி அவன் முன் சுழற்றி நெற்றியில் பொட்டு வைக்கிறாள். பிறகு அநுசுயா சுருட்டை முடிப் பையன் விநோத்தைக் கூட்டிவர அவன் கைகளால் மாலை அணிவிக்க பையனை அவளே உயரத்துக்கிக் கொள்கிறாள். புகைப்படக் கருவிகள் பளிச்சிடுகின்றன.

ராஜாவும் லோகாவும் ஒட்டாமல் நின்று கைத்தட்ட ரூப்குமாரை உள்ளே அழைத்து வருகின்றனர். மாடியில் காப்பியருந்த பங்கஜம், தெய்வநாயகி ஆகியோர் தட்டுக்களைச் சுமந்து படிகளில் விரைகின்றனர். பிறகு பிரார்த் தனை மண்டபத்தின் முன் மேடையில் வரவேற்பு உரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/181&oldid=1100630" இலிருந்து மீள்விக்கப்பட்டது