பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

181

கொண்டு குதிக்கிறான். அவள் சட்டென்று அவனை அணைத்துக் கொள்கையில் கண்ணtர் மல்குகிறது. “விடுரா, அசத்து சித்தியுமில்ல ஒண்ணுமில்ல. அவ எங்கே இருக்கா?” என்று கேட்டுவிட்டுச் சுமதி அவளைப் பாராமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு அவன் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு போகிறாள்.

அத்திம்பேர் உடனே வரிசையைவிட்டு விலகி, “நாளைக்கு வந்து அதைப் பாத்தாப் போச்சு. எத்தனை நாழி ‘கய நிற்பது? வாங்க, வேற இடத்துக்குப் போகலாம்!” என்று அவர்களையும் இழுத்துக்கொண்டு செல்கிறார்.

அவளைப் பளாரென்று மேனி வருந்த அடித்து, “ஏண்டி கழுதை, ஒடிப் போனாய்?” என்று கேட்டிருந்தால் அவளுக்கு இவ்வளவு மனம் நொந்திருக்காது. அக்கா! சுமதி அக்கா? சுமதி அக்கா! உனக்குக்கூட அவள்மீது இரக்கம் இல்லையா? குழந்தை பிறந்திருந்தபோது, உன்னை உட்காரவைத்து அவள் தலையில் எண்ணெய் தேய்த்து, சிகைக்காய் தேய்த்து நீர் ஊற்றிப் பணிவிடை செய்திருக்கிறாளே! சேலை துவைத்துப் போட்டிருக்கிறாள். விச்சுவை தலைச் சிரங்கோடு எத்தனை நாட்கள் ஆஸ்பத்திரிக்குச் சுமந்து சென்றிருக்கிறாள்! குழந்தை காட்டிய அன்பைக்கூட மறுத்து இழுத்துப்போக அவ்வளவு பெரிய குற்றமா செய்திருக்கிறாள்? பதினாறு வருஷங்கள் உங்களோடு தொடர்பு கொண்டிருந்த பாசம் இப்படித் துண்டிக் கப்படுமா? நெஞ்சம் உள்ளுற நெக்குவிட்டுக் கதறுகிறது.

மனிதன் தன் இயல்பான உறவு வட்டத்தைவிட்டு அகன்று அகன்று வந்தாலும் அந்த உறவு நெருக்கத்துக்குக் கவர்ச்சி அதிகம்; அதில் இரத்தக் கலப்பு இருக்கிறது. தாய், தந்தை, உடன்பிறந்தவர், பிறகு அண்டை அயலார், உடன் படித்து விளையாடியவர், ஒரு ஊர்க்காரர், ஒரு மொழி பேசுபவர் என்று வட்டங்கள் அகன்று சென்றாலும், மனிதன் ஏதேனும் ஒரு தொடர்பு வட்டத்து உறவு கண்டாலும் ஒட்டிக் கொள் ளும் இயல்பு கொண்டவன். அவள் இப்போது எந்த உறவு வட்டத்துக்கும் வராமல் தனித்து நிற்கிறாள், அன்பும் இரக்கமும் அதுதாபமும் வண்மையும் கூடிய இடத்தில் அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/183&oldid=1101211" இலிருந்து மீள்விக்கப்பட்டது