பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

ரோஜா இதழ்கள்

அடிவைத்திருக்கவில்லை. அறியாமை, வறுமையின் துயரப் பண்புகள், அதிகமான செல்வத்தில் வளரும் சுயநல ஆசைகள் இவற்றையே அவள் பார்க்கிறாள். மனித உறவுகள் இத் தகைய பண்புகளிடையே நிலைப்பதில்லை.

அவள் அண்டி இருக்கும் விடுதி, சமுதாய வாழ்வின் ஒழுங்கை மீறிச் சந்தர்ப்ப வசத்தாலோ, வேறு வகையாலோ இழிந்த பெண்களின் மறுவாழ்வுக்கு மருந்திட்டு நலஞ்செய்யும் அடைக்கல விடுதிதான்.

ஆனால், மேலே பார்க்கக் கவர்ச்சியாக இருக்கும் கனி, தோல் நீக்கியதும் அழுகல் வாசனையை வெளியாக்குவது போன்ற அநுபவத்தையே அவள் நுகர்ந்திருக்கிறாள். அந்த விடுதியின் உதவி நிதிக்காக ‘பால் ரூம் டான்ஸ்’ ஏற்பாடு செய்கிறார்கள். ஆயிஷா, நர்மதா, மிஸஸ் சிவநேசன் எல்லோரும் அந்த நடனம் ஆடுபவர்கள் என்று அவள் அறிந்திருக்கிறாள். அதில் கலை இருக்குமோ, என்னவோ. ஆண் பெண் இருபாலரும் மகிழ்ந்து கேளிக்கை அநுபவிக்க வகை செய்யும் அந்த மேநாட்டு முறை நடனம், இந்த விடுதியின் நன்னோக்கத்துக்கு ஒத்ததாக இருக்கமுடியுமா என்று மைத்ரேயி நினைத்துப் பார்த்திருக்கிறாள். ஒழுக்கம் என்பது என்ன? அது எந்த எல்லை வரையிலும் இருபாலருக்கும் சில சுதந்திரங்களை அநுமதிக்கிறது என்பதை அவள் சிந்தனை செய்து பார்க்கிறாள். செயற்குழுவினர் இல்லத்தில் கூடும் நாட்களில் புகழ்பெற்ற ஒட்டலில் இருந்து காப்பி, சிற்றுண்டி வருவதை அவள் அறிந்திருக்கிறாள். அவர்கள் சமுதாயத் துக்குச் சேவை செய்கிறார்கள். ஆடம்பரமாக உடுத்தி, அழகாகச் சிரித்து, ஆங்கிலத்தில் உரையாடிக்கொண்டு உண்ணுகின்றனர்; அங்குமிங்கும் காரில் செல்கின்றனர். அவர்களுடைய நோக்கங்கள், கவலைகளெல்லாம் செல்வாக்கு மிகுந்தவர்கள், சினிமா நடிகர்கள், அரசியலில் முன் நிற்பவர்கள் ஆகியோரிடம் நெருங்கி உறவாடுவதைப் பற்றியே இருக்கின்றன.

அந்த இல்லத்தில் உண்மையில் அநாதைக் குழந்தை களை அதுசுயா, புவனா போன்ற ஏழைப் பெண்கள்தாம் வளர்க்கின்றனர். கூலிக்காகவும் வாழ்வுக்காகவும் தங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/184&oldid=1101213" இலிருந்து மீள்விக்கப்பட்டது