பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

183

சொந்தவிருப்பு வெறுப்புக்களை ஒதுக்கிவைக்கும் கட்டாயத்துடன் யாரோ பெற்று, வேண்டாம் என்று போட்டுவிட்டுப் போன குழந்தைகளை உருவாக்குகின்றனர். இந்தக் குழந்தைகளில் எவரேனும் சிக்கலில்லா மனப்பாங்குடன், தாய் தந்தை அரவனைப்பைப் பெற்றுப் புகழ் பெறும் சிறப்போடு வளருவார்களா ?

ஏழைகளும் அபலைகளுமான பெண்களை வைத்துக் கொண்டு, ஒழுங்கீனமாக வாழ விரும்பும் ஆண்களுடைய ஒத்துழைப்புடன் யாரோ வியாபாரம் செய்தால் அதற்கு அந்த அபலைப் பெண்கள் மட்டுமா குற்றவாளிகள்? வாடிக்கையாளரும் வாடிக்கை இல்லாதவரும் உற்சாகம் நல்கித் தானே பெண்கள் சீரழிந்திருக்கிறார்கள்? அந்தக் குட்டையிலிருந்து மீட்டுவந்து, இங்கே எந்த எதிர்கால வண்மையைக் காட்டி இந்தக் குட்டைக்குள் இவர்களை வைத்திருக்கிறார்கள்? நல்ல வளமும் அழகுமுடைய பெண் ஒருத்தி மனம் விரும்பிக் காதல் கொண்டு ஒருவனைக் கைப்பிடித் திருந்தும் யானை விழுவதற்காகக் கருப்பங் கழிகளை நட்டு வைத்த பள்ளத்தைப்போல் அந்தத் திருமண உறவு முறிந்து போவது நிகழ்கிறது. ஏற்கெனவே தூய்மையில்லாத ஒருத்தியை எவன் வந்து கைபிடித்து, உயரத்துக்கி நல்வாழ்வு கொடுக்கப் போகிறான். அன்றி, இவர்கள் தராசுத்தட்டை ஈடு செய்யத் தங்கள் தங்கள் பங்குக்குப் பத்தாயிரம் பதினைந் தாயிரம் கட்டிக் கொடுத்து இந்த அபலைப் பெண்களுக்கு வாழ்வை வாங்கிக் கொடுக்கப் போகிறார்களா?

அக்காவின் சுடு சொற்கள், இப்போது நிலாவில் ஒளிர்ந்த சொற்களாகத் தோன்றுகின்றன. அம்மா என்ற ஒருத்தியின் நிலையில் அவள்தான் பால் புகட்டிப் பாராட்டிச் சீராட்டி வளர்த்திருக்கிறாள். அந்த அக்கா அன்று வந்திருக்கவில்லை. அத்தனை நாட்கள் சென்றபின் கருவுற்றிருந்தது உண்மை யானால் அக்காவுக்கு ஒரு குழந்தை பிறந்திருக்குமே?.

குழந்தை...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/185&oldid=1100637" இலிருந்து மீள்விக்கப்பட்டது