பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

185

துச் சென்று விட்டாள். அவள் சென்ற பிறகு அந்த அறையில் அவள் தனியாகவே படுத்திருக்கிறாள். முகம் எரியக் கண்ணீர் விட்டவள் குளியலறைப் பக்கம் இருட்டிலே சென்று முகததைக் கழுவிக்கொண்டு படுக்கவரும்போது, தன் தலையனையில் யாரோ படுத்திருப்பது கண்டு திடுக்கிட்டாற் போல் விழிக்கிறாள்.

படுத்திருப்பவள் யாரோ? “யாரடி என் படுக்கையில் படுத்திருக்கிறாய்?” என்று அதட்ட அஞ்சி நிற்கிறாள். எவளோ வேண்டுமென்று செய்த செயல் இது. எனவே, தனக்கு ஒரு போர்வையும் தலையணையும் வேறு எடுத்துக்கொண்டு வந்து படுக்கலாம் என்றெண்ணி மைத்ரேயி கூடத்துக்கு வருகிறாள். யார் அங்கே வந்து படுத்திருக்கிறாளோ, அவளுடைய போர்வை தலையணை இருக்குமே?

அவள் அரிக்கேன் விளக்கை எடுத்துக்கொண்டு பார்க்கையில் யார் கையிலோ கால்பட்டுவிடுகிறது.

மீனாட்சி; “பாதி ராத்திரிலே என்னடி தேடுறே?...”

“ஒண்னுமில்லே. ஒரு தலையணை போர்வை....என் படுக்கையிலே யாரோ வந்து படுத்திருக்கிறா...”

அவள் மறுமொழியேதும் கூறவில்லை. திரும்பிப் படுக்கிறாள். தலையணை போர்வை எதுவும் கிடைக்கவில்லை. மார்கழி மாதமாதலால் சில்லென்று இருக்கிறது. ராசம்மா சமையற்கட்டு வாயிற்படிக்கு நேராகக் குறட்டை விட்டுத் துரங்குகிறாள்.

மைத்ரேயி அறைக்கு வந்து மெள்ள அந்தத் தலையணையை ஒருபுறம் இழுத்துக்கொண்டு நெருங்கிப் படுக்க முயலுகிறாள். அவள் அப்படி இழுக்குமுன் விருட்டென்று எழுந்து உட்காரும் பங்கஜம் நாவில் நரம்பின்றி வசை பாடுகிறாள்.

மைத்ரேயி வாயடைத்துப் போகிறாள்.

“என்ன பங்கஜா, தூக்கக் கலக்கமா? ரொம்பப் பேசாதே. என் படுக்கையில் வந்து படுத்திட்டுப் பேசறே?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/187&oldid=1100643" இலிருந்து மீள்விக்கப்பட்டது