பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

ரோஜா இதழ்கள்


“மூடுடி வாயை, கேடு கெட்டவளே ! உன் யோக்கியதை தெரியாதா எங்களுக்கு ? யாருடீ தூக்கத்தில் பேசுறவ, துாக்கமாம்!” என்று கீழ்த்தரமான சொற்களைக் கொட்டு கிறாள் பங்கஜம்.

மைத்ரேயி அத்தகைய சொற்களை அதற்குமுன் கேட்டதில்லை. இனிமையாகக் குரலெடுத்துப் பாடும் பங்கஜமா இப்படி வெறி கொண்டு வசைபாடுகிறாள்: ராசம்மா எழுந்து வருகிறாள் இந்த ரகளையில்,

“என்ன ஆச்சு இப்ப?..”

மைத்ரேயி வாய் திறக்குமுன் பங்கஜம் அழுகுரலில் மைத்ரேயி அவளை அவள் படுக்கையிலிருந்து இங்கே இழுத்து வந்ததாகக் கூறும்போது அவள் அதிர்ந்து நிற்கிறாள்.

“இல்லே ராசம்மா, நான் எதற்காக அப்படிச் செய்யப் போகிறேன்?...” என்று உண்மையைக் கூறினாலும் அதை மறுத்துப் பொய்யை மெய்போல் சாதித்துக்கொண்டு அழுகுரலில் ஊளையிடுகிறாள் பங்கஜம்.

“பாதி ராவிலே சத்தம் போடாதே. இப்ப உன் இடத்தில் போய்ப்படு....” என்று சமாதானம் கூறி அவளை அனுப்பி விட்டு ராசம்மா தன் படுக்கையை மைத்ரேயியிடம் கொண்டு வந்து போட்டுக் கொள்கிறாள். அன்றிரவு முழுவதும் மைத்ரேயி உறங்காமல் தன் தலைவிதியை நொந்து கண்ணீர் வடிக்கிறாள்.


11

விடுமுறை முழுவதும் பகலில் கண்காட்சி ‘ஸ்டாலும்’ இரவில் மட்டுமே விடுதியுமாகப் பொழுது செல்கிறது. அவள் யாருடனும் பேசுவதில்லை. கண்காட்சியில் அநுசுயாவோ, புவனாவோ பொறுப்பைப் பகிர்ந்துகொள்ள வரும்போதுகூட தேவைக்கு அதிகமாக அவள் பேசுவதில்லை. இரவில் ராசம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/188&oldid=1115349" இலிருந்து மீள்விக்கப்பட்டது