பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

187

மாளே அவளருகில் படுத்துக் கொள்கிறாள். இறுதியாண்டுத் தேர்வை எண்ணி அவள் அநேகமாக எப்போதும் படித்துக் கொண்டே இருக்கிறாள். வேறு எந்த நடவடிக்கையைக் குறித்தும் அவளுடைய பிரக்ஞை கூர்மையாகச் செயல்படவில்லை.

எனவே, பெண்கள் தன்னைப்பற்றி என்ன பேசினார்கள், என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதையே அவள் அறிய வில்லை.

அடுத்து செயற்குழு மாடியில் கூடுமுன் சில உறுப்பினர் களிடம் அந்தப் பெண்கள் கூட்டமாகச் சென்று பேச்செழாமல் ஒதுங்கி நாணி நின்று சாகசம் செய்ததையும், பிறகு எழுத்து மூலமாக தங்கள் குறைகளைத் தெரிவித்ததையும் அவள் அறியாள்.

அன்று மாலை அவள் பள்ளியிலிருந்து திரும்பும் நேரத்தில் அலுவலக அறையில் லோகாவும் டாக்டர் மித்ராவும் இருக்கக் காண்கிறாள்.

டாக்டர் மித்ரா இந்த இல்லத்தின் மருத்துவர். குழந்தை களைப் பார்க்க நாள்தோறும் வருவதுண்டு. வயது முதிர்ந்த அந்த அம்மாள் மிக அன்பாகப் பேசுவார். அவருடைய சிரிப்பே அமுதம் தோய்ந்தாற்போல் இருக்கும்.

லோகா அவளைக் கண்டதும் அழைக்கிறாள். “ஸ்கூல் பஸ் இவ்வளவு சுருக்காக வருகிறதா என்ன ?”

“இல்லை மேடம், எனக்கு கிளாஸ் இல்லை. ஸ்டடி லீவுதான் இப்ப.”

“நான் அங்கேயுள்ள ஹாஸ்டல் பெண்ணுடன் சேர்ந்து படிக்கப் போனேன். அதனால் வந்துவிட்டேன். இன்னிக்கு எனக்கு ராத்திரி கிச்சன் ட்யூட்டி...”

“தனியாகவா வருகிறாய்?”

“நான் நடந்ததுதான் வரேன் மேடம்.”

லோகா அவளை ஏற இறங்கப் பார்க்கிறாள். “நீ தனியாக வருவதும் போவதும் சரியில்லை. காத்திருந்து பஸ் வரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/189&oldid=1100725" இலிருந்து மீள்விக்கப்பட்டது