பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

ரோஜா இதழ்கள்

போது தான் திரும்பவேணும். சரி, போய் டாக்டருக்கு லைம் ஜூஸ் கொண்டு வா!’ என்று அனுப்புகிறாள்.

லோகாவிடம் இந்தக் கடுமையை அவள் எதிர்பார்க்கவில்லை. அநுசுயாவும் புவனாவும். சுதந்திரமாக வெளியே பஸ்ஸில் செல்கின்றனரே ஒழிய, உண்மையில் அவள்தான் விடுதியின் மற்ற பெண்களைத் தவிர சுதந்திரமாகப் பள்ளிக்கு சென்று வருகிறாள். ரோஸியும் மீனாட்சியும் பஸ் வரவில்லை என்றால் பள்ளிக்கே செல்வதில்லை. “ஜெயில் புள்ளிகளைப் போல் போகணும் வரணும்..” என்று அநுசுயா கூறியது செவிகளில் ஒலிக்கிறது.

சமையற் பகுதிக்குச் சென்று முத்தம்மாளிடம் எலுமிச்சம் பழமும் சர்க்கரையும் கேட்டு வாங்கிப் பிழிந்து கரைத்துக் கொண்டு மைத்ரேயி அலுவலக அறைக்குத் திரும்பி வருகிறாள்.

அங்கு டாக்டரையும் காணவில்லை; லோகாவும் இல்லை.

மல்லிகா மட்டுமே அவளை நோக்காமலே அலட்சி யமாக “மேலே இருக்காங்க போலிருக்கு அங்கே கொண்டு போ” என்று பணிக்கிறாள்.

மைத்ரேயிக்குப் படியேறும்போதுகூட அவர்கள் ஏன் மாடிக்குப் போனார்கள் என்று புரியவில்லை. அந்த முழு வட்டத்திலும் லோகா ஒருத்தியே சிறிதேனும் உண்மையான ஆர்வத்துடன் பொறுப்பை நிர்வகிப்பதாக அவள் கருதுகிறாள். அந்த வேஷக் கலப்பற்ற உண்மையினாலேயே லோகாவின் செயல் முறைகளும் நடப்பும் மற்றவர்களுக்குப் பிடிப்பதில்லை என்று மைத்ரேயி புரிந்துகொண்டிருக்கிறாள். லோகா இயல்பை மீறி யாரிடமும் குழைந்து பேசுவதில்லை. முறைகேடென்று தெரியவந்தால் அதை ஒளித்து வைக்காமல் அங்கேயே உடைத்துப் பரிகாரம் தேடுவது அவள் வழக்கம். அவள் தன் அதிருப்தியைத் தெரிவிக்கும் வகையில் நடந்து கொண்டதற்கு வருந்துகிறாள். அவள் மீது ஏற்கனவே மற்ற பெண்கள் பொறாமை கொண்டு நடக்கின்றனர். எனவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/190&oldid=1100726" இலிருந்து மீள்விக்கப்பட்டது