பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

ரோஜா இதழ்கள்


‘பேசுவதற்குக் கதவைச் சாத்துவானேன்?’ அவளுக்கு கேட்க நாவெழவில்லை. ஆனால்...

“உனக்குக் கல்யாணம் ஆயிருக்குல்ல ?”

“அந்தத் துயரக் கதையை இப்போது எதற்குக் கேட்கிறீர்கள்” என்று வினவுகின்றன. அவள் விழிகள். குனிந்த படியே “ஆமாம்” என்று தலையாட்டுகிறாள்.

“எத்தனை மாசம் இருந்தாய் அவனுடன் ?”

“நாலு மாசம்....”

“சந்தோஷமாக இருந்திருப்பாய் இல்ல?”

“சந்தோஷமாக இருந்திருந்தால் இங்கே வந்து அல்லல்படுவேனா...”

“பாவம் நீ இரவெல்லாம் நினைச்சு நினைச்சு அழுகிறா யாமே ? நீ சரியாக இரவு தூங்குகிறதில்லையாமே?”

“என்னது? நீங்க என்ன கேட்கறீங்க டாக்டர் ? நான் மடத்தனமாக ஆளைப் புரிஞ்சுக்காமப் போய் பாதாளத்தில் விழுவது போல் விழுந்தேன். நல்ல வேளையாக அங்கே ஒரு அம்மாள், “உன் போன்ற நல்ல குலப் பெண்கள் வந்து நல்ல படியாக வாழ முடியாது. போய் எங்கேயானும் பிழைத்துக் கொள்ளுன்னுச் சொன்னபோது பயந்து ஓடிவந்தேன். வீட்டில் அக்காவின் கணவர் என்னை அடித்து விரட்டினார். பிறகு லோகாம்மாவிடம் வந்து அண்டினேன்...”

அவள் முகம் சிவக்க, கண்கள் தளும்ப, மென்மையான உணர்வுகள் சிதையும் வேதனையில் விடுவிடென்று பேசும் போது டாக்டரின் முகம் மேலும் கணிகிறது.

“தப்பாக எடுத்துக் கொள்ளாதே. இங்குள்ள பெண்கள் உன்மீது மிகவும் இழிவான வகையில் குற்றம் சாட்டி யிருக்கிறார்கள்...”

“என்ன குற்றம் சாற்றினார்கள் டாக்டர்? நான் வெளியே பள்ளிக்கூடம் போய் வரும் நேரத்தில் யாரையேனும் சந்திக் கிறேன்னு என்மீது அடாப்பழி சுமத்துகிறார்களா? கடவுளே, நான் ஏன் இங்கே வந்தேன் ? நான் இங்கு உள்ளவர்களை அடிமனசிலிருந்து வெறுக்கிறேன். இவர்கள் விரசமாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/192&oldid=1100730" இலிருந்து மீள்விக்கப்பட்டது