பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

191

பேகம் போதெல்லாம் கூசிப் போகிறேன். இவர்களுடைய போகம் செய்கைகளும் கேலிகளும் சாடைகளும். நான் அடியோடு வெறுக்கிறேன். உங்களிடம் என்ன பழி சுமத் தினார்கள், டாக்டர் ? நான் கருவுற்றிருக்கிறேன் என்று கூறினார்களா? எனக்கு நோயிருக்கிறதென்று சொன்னார் களா? அவர்கள் உங்களிடம் என்ன பழி சுமத்தி என் மீது உங்களைச் சந்தேகப் படச் செய்திருக்கிறார்கள்...”

நெஞ்சத்துக் குருதிக்களத்திலிருந்து செந்தீமலர்கள்போல் அவளுடைய கேள்விகள் டாக்டரின் செவிகளில் வந்து படிகின்றன.

அவள் தன் அன்பான கைகொண்டு மேனி துடிக்க நிற்கும் அவள் கையை அழுந்தப் பிடிக்கிறாள். “ஷ்...ஒண்ணு மில்ல, ஒண்னுமில்ல. நான் நம்பல. லோகாவும் நம்பலே I am Sorry my dear -இதை மறந்துவிடு...நீ இங்கே இருக்க வேண்டியவள் அல்ல. உன்னை வேறு தகுதியான இடத்துக்கு நான் அனுப்பச் சொல்றேன்...”

“ஒரு அப்பாவின்னா யார் வேணுமானாலும் என்ன வேணுமானாலும் சொல்லலாம் கேட்கலாம்னு நினைக்கிறாங்க...”

தன் நடத்தைமீது அவர்கள் சந்தேகம் கொண்டார்கள் என்ற செய்தி உறுதியான பிறகு அவளுக்கு அடக்க இயலா மல் கண்ணிர் பெருகுகிறது.

“ஷ...நோ...நோ...மை சைல்ட். அழக்கூடாது. கம் ஆன் (come on) லெட் அஸ் ஷேர்(let us share)” என்று நீர்ப்பானையின் மீது கவிழ்த்திருந்த டம்ளரை எடுத்து பாதிப் பழச்சாறை அதில் ஊற்றுகிறாள்.

“இந்தா நீ பாதி, நான் பாதி அருந்துவோம்.”

“எனக்கு வேண்டாம், டாக்டர்...”

“நான் சொன்னால் கேட்கவேணும். இவ்வளவு மென்மையான தோலை வச்சிட்டு இந்த உலகில் எப்படிப் பிழைக்கிறது.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/193&oldid=1100734" இலிருந்து மீள்விக்கப்பட்டது