பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

ரோஜா இதழ்கள்


அப்போது வெளிக்கதவு மெல்ல ஓசைப்படுகிறது.

“எஸ். எஸ். வா, லோகா.......”

லோகாதான். அவள் எதுவுமே கேட்குமுன் டாக்டர் மித்ரா ஆங்கிலத்தில் சரமாரியாகப் பேசுகிறாள். கடுமையாக கோபிக்கிறாள்.

“நான் ஒண்னு சொல்றேன் லோகா, இங்கே இருக்கும் சில கேர்ள்ஸ் ஆர் ராட்டன். நீ அதுங்களைத் தனியே பிரிச்சு வச்சாலும் கஷ்டம், சேர்த்தாலும் இப்படித்தான். தானே விழுந்து அடிபட்டுக்கிட்டா குழந்தைக்கு ரொம்ப நோவில்ல. ஆனா அரிவாளை எடுத்து வெட்டிட்டு நீ என்ன வைத்தியம் பண்ணாலும் மனசில் அந்த வடு பயங்கரமாய் விழுந்துடும். யாரானும் என் கம்ப்ரன்ஸ் இல்லாதவங்க அடாப்ட் பண்ணிக்கறப்பல இருந்தா இவளைப் பிரிச்சுவிடு.” என்று கூறிவிட்டு விடைபெற்றுக் கொள்ளாமலே படி இறங்கிப் போகிறாள்.

சில விநாடிகள், கொல்லென்று அமைதித்திரை தொங்குகிறது. கண்ணிர்க் கறைபடிந்த முகத்தை நிமிர்த்தி மைத்ரேயி லோகாவை நேருக்கு நேராகப் பார்க்கிறாள். அடிபட்ட புலியின் சீற்றம் அவளுடைய விழிகளில் ஒளிர்கிறது.

“நடந்ததை மறந்துவிடு. முகத்தைப் போய்க் கழுவிக் கொள். இம்மாதிரி இடத்தில் இதெல்லாம் தவிர்க்க முடியாது. நீ போகலாம்...”

லோகா ஒரு கண நெகிழ்ச்சியை உலுக்கி உதறித் தள்ளிவிடுகிறாள். படியிறங்கி வரும்போது மைத்ரேயிக்குத் தலைசுற்றுவது போலிருக்கிறது. என்ன பழியைச் சுமத்த, டாக்டர் மித்ராவை அழைத்துப் பரிசீலனை செய்ய முயன்றார்கள்? அவள் கள்ளத் தொடர்புகொண்டு சூலுற்றிருக்கிறாள் என்று கூறியிருப்பார்களோ? அதற்கான என்ன அறிகுறிகளை அவர்கள் அவளிடம் கண்டார்கள்? அவள் சில நாட்களில் பகாசுரப் பசியோடு புழுக்கட்டிய மாவின் கூழைக்கூட விழுங்குகிறாளே ? சொல்லப் போனால் அந்தக் கூழைத்தான் அவர்கள் மிகுதியாக அவள் பங்குக்கு வைக்கிறார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/194&oldid=1100737" இலிருந்து மீள்விக்கப்பட்டது