பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

193

கள்? அவள் ஒரு நாள் கூட வாந்தி எடுக்கவில்லை; தூங்கி வழியவில்லை.

உலகத்துக் கவடுகள் ஒட்டியிராத மனசு பேதமை மிகுந்த தாய், எதையெல்லாமோ நினைத்து வேதனைப்படுகிறது. டாக்டர் மித்ரா கடுமையாக ஆங்கிலத்தில் பேசியபோது, ஒரு சொல் அவளுக்குப் புரியாததாக ஒலித்தது. அதன் பொருள் நன்றாக அவளுக்குப் புரியவில்லை எனினும், பாலுணர்வு சம்பந்தப்பட்ட சொல் அது என்று மட்டும் புரிந்து கொள்கிறாள். பாலுணர்வின் விகாரங்களில் சிக்கி, வெளியே கள்ளக் காதலனைத் தேடிச் செல்கிறாள் என்று கூறியிருப்பார்களோ? அதை டாக்டரைப் பக்குவமாக விசாரிக்கச் செய்த பின் தண்டனை கொடுக்கலாம், என்று லோகா நினைத்திருப்பாளோ?

அவளைப் பார்த்தால் பிறர் அப்படி நினைக்கும் படியாகவா இருக்கிறாள்?

எனினும் அவள் கேள்விப்பட்ட அந்தச் சொல்லுக்குப் பொருளைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவளைக் குடைகிறது. அகராதியைப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். அகராதி அவளிடம் இல்லை. சேவா நிலையப் பள்ளியின் மாணவர் விடுதியில் இருக்கும் அவளுடைய வகுப்புத்தோழி வத்சலாவிடம் கேட்க வேண்டும்.

வத்சலாவுக்கு உடல்நிலை சரியாக இல்லாததால் அன்று வகுப்புக்கு வந்திருக்கவில்லை. அதுவும் நன்மையாகப் போகிறது. பகலுணவு முடித்ததும் மைத்ரேயி விடுதியறைக்குச் சென்று வயிற்றுக் கடுப்பினால் படுத்திருக்கும் வத்சலாவை நலம் விசாரிக்கிறாள். பிறகு புத்தக அலமாரியிலிருந்து அகராதியை எடுத்துப் பரபரப்பாகப் புரட்டுகிறாள்.

“ஈ..ஜி...எச்...ஹோமோ செக் ஷூவல்...”

பார்த்த கண்கள் பார்த்தபடியே நிலைக்க, தலைக்குமேல் கூரை விழுந்து நொறுங்கி விட்டாற்போல் தோன்றுகிறது. கன்னங்களில் முழுபலத்துடன் அறைவிழுந்தாற்போல் செவிகளில் ஹொய்யென்ற ரீங்காரம் கேட்கிறது. இப்படியும் ஒரு.ரோ.இ-13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/195&oldid=1100740" இலிருந்து மீள்விக்கப்பட்டது