பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

ரோஜா இதழ்கள்

ஒரு கோளாறு... ஒரு பதம் இருக்கிறதென்றே அறிந்திராத அவளுக்கு நெஞ்சத்து ஈரம் திடீரென்று உலர்ந்து, அனற்புகை நிறைகிறது.

“என்னப்பா? என்ன வார்த்தை பார்க்கிறே? ஏம்மா ? என்னமோ மாதிரி ஏம்பா, கண்ணில தண்ணி வருது...”

தரையில் அப்படியே உட்கார்ந்து மைத்ரேயி கண்ணீரை விழுங்கிக் கொள்ள முயலுகிறாள்.

“எனக்கு...தண்ணி இருக்கா வத்சலா?...”

வத்சலா உடனே பானையிலிருந்து நீர்மொண்டு வருகிறாள். மடக் மடக்கென்று அந்த நீர் முழுவதையும் குடித்த பின்னரும் அந்த வேதனைத் தீ குளிரவில்லை.

மற்றவர்கள் எல்லாரும் கூடிக்கூடி அவளைப் பற்றிப் பூடகமாகப் பேசினாலோ, சிரித்தாலோ அவள் இத்தனை நாட்களாக பொருட்படுத்தியதில்லை.

அவர்களைத் தன்னால் வெறுத்து ஒதுக்க முடியும் என்று அலட்சியமாக இருந்திருக்கிறாள். ஆனால் அவளுக்கு உரியதாக இந்த இழிவான பதத்தை அவர்கள் சூட்டியிருப்பதை நினைத்த மாத்திரத்தில் தானே ஆவியாகிப் போய் விடக் கூடாதா என்று ஏங்குகிறாள். பள்ளியிலிருந்து திரும்பி வழக்கம்போல் இயங்கினாலும் மனசு அந்த ஒரே சொல்லின் ஆணிமுனையில் தைத்துக்கொண்டு குருதி வழியத் துன்புறுகிறது. விடுபட இயலாமல் வேதனையுறுகிறது. படிக்க அமர்ந்தால் பொருந்தவில்லை. இரவு சிறிது கண்ணயரு முன்பே இடையே தன்னை யாரோ நெருக்கிப் பிடித்து முத்தமிட வருவதுபோலும், கழுத்தை நெரிப்பது போலும் பயங்கரக் கனவு கண்டு திடுக்கிட்டு விழிக்கிறாள்.

‘செக்ஸ்’ என்றாலே என்னவென்று தெரியாத அவளுக்கா... அவளுக்கா!

இரண்டு சனிக்கிழமைகளாக ஞானம்மா இல்லத்துக்கு வரவில்லை. அன்று அவள் வருவாள் என்பதை கூறும்போது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/196&oldid=1100741" இலிருந்து மீள்விக்கப்பட்டது