பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

ரோஜா இதழ்கள்


“என்னிடம் சொல்லேன் ? என்ன விசேஷம் மைத்தி ? பங்கஜா மறுபடி ஏதேனும் அசிங்கமா சண்டை போட்டளா?”

“ஏதானும் என்ன சொல்வது? காக்கைக் கூட்டில் குயில்வளர்ந்தாலும், அத்தனை காக்கைகளுமாகச் சேர்ந்து சிறகு வளர்ந்திராத அதன் சிறு உடலைக் கொத்திக் கூடாக்கி விடும். இது அவர்களுக்குரிய இடம். நீ அன்னிக்கே சொன் னாய். ஆனால் எனக்கு வேறென்ன வழி இருந்தது? எனக்கு ஏதானும் நோவு வந்து சீக்கிரமாகச் செத்தொழிஞ்சால் நல்லாயிருக்கும்!”

குரல் கரைந்து கண்ணீரில் சங்கமமாகிறது.

“சே, என்ன பேச்சிது? லோகாம்மாவிடம் எதானும் புகார் இருந்தால் தைரியமாகச் சொல்லேன்?...”

அப்போது சரசரவென்று செருப்பொலி கேட்கிறது. மைத்ரேயி துணுக்குற்றாற்போல் எழுந்து நிற்கிறாள்.

ஞானம்...ஞானம்மா... மெல்லிய கீற்றிட்ட காவி வண்ணச் சேலை. ஆங்காங்கே வெண்மை இழைதெரியும் பசையற்ற கூந்தல்...

“என்னம்மா மைத்ரேயி? காய்ச்சலா?...”

விழிகள் அவளை ஆதுரத்துடன் ஊடுருவ நோக்குகின்றன.

“இல்லை...மேடம்...த...தலைநோவு...வந்து”

“அப்படியானால் ஏன் படிக்கிறே? ஏதானும் மாத்திரை சாப்பிட்டுவிட்டுப் படுக்கக் கூடாது?”

“ஓ...இல்ல...இத வந்திடறேன்...” என்று மைத்ரேயி தடுமாறுகிறாள்.

“நான் உன்னை வரச்சொல்லிக் கட்டாயப்படுத்தவா வந்தேன்? அசடு இந்தா...”

கைப் பையைத் திறந்து ஒரு மாத்திரை எடுத்துக் கொடுக்கிறாள் ஞானம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/198&oldid=1100746" இலிருந்து மீள்விக்கப்பட்டது