பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/200

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
12

கர எல்லையைக் கடந்து, சாலையின் இரு புறங்களிலும் பசுமை பாய்விரிக்கும் வயல்களை எல்லாம் காட்டிக் கொண்டு பஸ் ஓடுகிறது. மைத்ரேயி ஞானத்தின் அருகாமையில் தான் உட்கார்ந்திருக்கிறாள். அவளிடம் எத்தனையோ கேள்விகள் கேட்க உள்ளம் துடித்தாலும் கேட்க நா எழாமல் அமர்ந்திருக்கிறாள். ஒவ்வோர் கணத்தில் தான் காண்பது கனவல்லவே, நனவுதானே என்ற ஐயத்தைப் போக்கிக் கொள்பவளாகத் தன்னைத்தானே கிள்ளிப் பார்த்துக் கொள்கிறாள். நனவுதான். அந்த மாலை மிக இனிமையாக இருக்கிறது. ஞானம்மா, அவளுக்கு ஞானத்தாய் போல் திகழும் ஒரு அம்மையுடன் அவள் புதிய வாழ்வுக்குப் போகிறாள். அவள் பிறந்ததிலிருந்து அறிந்திராத ஒர் ஒட்டுறவுடன், ஆவுள் வாழப் போகிறாள். மதுரத்துடன் அவள் வாழ்வின் திருப்பம் ஒன்றில் திரும்பியபோது வறுமையும் சிறுமையும் உடன் வந்தன. இந்தத் துணையில் அன்புடன் வறுமையும் சிறுமையுமில்லாத நம்பிக்கையே ஒளியாக இருக்கிறது. அவள் முழுசாக மீண்டு வருகிறாள். அவளுக்கே வியப்பாக இருக்கிறது. டாக்டர் மித்ரா, லோகா, ராஜா, எல்லோரும் ஞானம் அவளைத் தன்னுடன் இணைத்துக் கொள்வதற்கு உதவியிருக்கின்றனர். ஞானத்துடன் அவள் இன்னும் நெருங்கிப் பழகவில்லை. பள்ளி இறுதிப் பரீட்சையை முடிக்கும்வரை அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மூன்று மாசங்கள் இந்த நன்னாளுக்காகக் காத்திருந்தாலும் ஒரு நாள்கூட அவளுடைய இருப்பிடத்தை மைத்ரேயி சென்று பார்த்திருக்கவில்லை. ஞானத்துடன் முழுசாக ஒரு நாள்கூட அவள் தனியாக இருந்து பழகியிருக்கவில்லை. அருகாமைக்கு நெருங்குமுன்னரே அவள்மீது இவ்வளவு பற்றுதல் எப்படித் தோன்றியது? ஒரு கால் இதுதான் ஒரு இன....

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/200&oldid=1100748" இலிருந்து மீள்விக்கப்பட்டது