பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

199

முள் குத்தினாற் போலிருக்கிறது. சட்டென்று ஞானம்மா அவளைத் திரும்பிப் பார்த்துப் புன்னகை செய்கிறாள். அந்தச் சரிப்பில் ஒரு கவடும் இல்லை.

“இன்னும் கொஞ்ச தூரம்தான்.”

“நீங்கள் இப்படித் தினமும் பஸ்ஸில் வருவீர்களா?”
“எதற்கு ? காலனியில் எல்லாம் கிடைக்குமே : சனிக் கிழமை மட்டுமே வருவேன்.”

“என்ன ப்ராஜக்ட் அது? என்னமோ ‘ஹெல்த்’னு சொன்னார்களே ?”

“அதாவது, கிராமங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, சுகாதாரம், சுத்தம் இவற்றுடன் நோய்வராமல் தடுத்துக் கொள்ள நம் கிராமங்களுக்கேற்ற எளிய முறைகளில் பயிற்சியும் அளித்து, அதே முறைகளில் ஆராய்ச்சியும் செய்வதான திட்டம். இந்தத் திட்டத்துக்கு ஒரு அமெரிக்கக் கருணை வள்ளலின் நிதி இருக்கிறது.”

பஸ் ஒரு குன்றைச் சுற்றினாற்போல் கொலுவைத்தாற் போல் காணப்பெறும் சிமிட்டித் தகட்டுக் கூரை இல்லங்களும் பூஞ்செடிகளும் குட்டை மரங்களுமாயமைந்த குடியிருப்பின் முன் சாலையில் நிற்கிறது. “ஓரியன்டேஷன் சென்டர்...!”

மைத்ரேயி ஞானம்மாவுடன் இறங்குகிறாள். கையில் அவளுக்கென்று புதிதாக ஞானம்மா வாங்கிக் கொடுத்த சிறு பெட்டியில் அவளுடைய புதிய துணிகள் இருக்கின்றன. இரண்டொரு புத்தகங்களைக் காகிதத்தில் சுற்றிக் கையில் வைத்துக் கொண்டிருக்கிறாள். புத்தகங்கள் பள்ளியில் நடந்த பேச்சுப் போட்டியில் அவள் பரிசாகப் பெற்றவை. ஒன்று தாகூரின் கீதாஞ்சலித் தொகுப்பு, இரண்டு நேருவின் கடிதங்கள். உலக வரலாற்றின் பகுதிகள் அவளுடைய உடமைகள்.

ஒரு சிறு பூஞ்சாரல் அடித்து மண்ணைக் குளிரச் செய்திருக்கிறது. வரிசை வரிசையாக விளக்குகள் பூக்கின்றன. எல்லாம் மிக மிக இனிமையாக இருக்கிறது. வரிசையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/201&oldid=1101243" இலிருந்து மீள்விக்கப்பட்டது