பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

205

வீட்டுக்கு வீடு ஏக்கர் ஏக்கராவா நிலம் இருக்கிறது? அப்படி இருந்தாலும் அப்படி நடந்துபோக யாருக்குப் பொறுமை இருக்கிறது? ஏக்கர் ஏக்ராவா நிலம் வைத்துக் கொண்டிருப்பவன் பணத்தைப் பெருக்கித் தன் சுகத்தைப் பெருக்கிக் கொள்கிறானே ஒழிய, கிராம நலத்தைப் பற்றியோ கிராம மக்களைப் பற்றியோ கவலைப்படுகிறானா? எனவே ஜனப் பெருக்கமும் இட நெருக்கமும் தாவித் தாவி நகரத்தைப் பெருக்கிக்கொண்டு செல்லும் இந்த நாட்களில் இந்த முறையில் கிராமத்துக்கு வெளிச்சம் போடுவதில் ஒரு பயனும் இல்லை. தேவைகளை அதிகரித்துக் கொள்ளாதே. கதர் உடுத்துங்கள், சர்க்கா சுற்றுங்கள்; கிராம மக்கள் நகரை நம்பியிருக்கக் கூடாது’ என்று நான் போய் எந்த கிராமத்தி லேனும் சொல்லிப் பிழைக்க முடியுமா ?”

“அப்படிச் சரிவராமல் போய் திட்டம் தோல்வி என்று ஏன் மூடவில்லை ?”

ஞானம் கலகலவென்று சிரிக்கிறாள். “மிகச் சரியான கேள்வி, நீ அடி மடியிலேயே கை போடுவாய்போல இருக்கு...!”

“ஏன் ஸிஸ்டர் ? தோல்வின்னு தெரிஞ்ச பின்னும் ஏன் மூடக்கூடாது ?”

“அசடு இழுத்து மூடிவிட்டால் இந்த வீடுகளைக் கட்டுவதற்காக வரும் கான்ட்ராக்ட்காரன் போன்றவர்கள் பிழைப்பது எப்படி ? ஒட்டல்காரன், பால்காரன், முட்டைக் காரன் இவர்கள் எல்லாரும் பணக்காரர்களாவது எப்படி? யார்யாரெல்லாமோ சம்பந்தம் இல்லாதவர்கள் பிழைக்கும் போது, இந்தியா முழுதுமுள்ள பகுதிகளிலுள்ள டாக்டர்கள், மற்றும் சுகாதாரப் பணிசெய்பவர்கள் என்ற பெயர்களில் இந்த ஊரை வந்து பார்த்துவிட்டுப் படியும் சம்பளமும் வாங்கிக் கொண்டு போகக் கூடாதா? இந்தத் திட்டத்தின் பெயரில் பிழைக்கும் அதிகாரிகள் வெளிநாட்டுக்குப் போகும் சந்தர்ப்பங்களை வேறு இழக்க வேண்டிவரும். நானும் கூடத்தான் அலுவலகத்திற்குச் சென்று ஏதோ நான்கு தாளில் கையெrமக்கப் போட்டு அரட்டை பேசிவிட்டு, இரண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/207&oldid=1101252" இலிருந்து மீள்விக்கப்பட்டது