பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

207

எனக்கு மென்மையான தோல். இப்போது உணர்ச்சி மரத்து விட்டது. இது உலகம்...”

மைத்ரேயி அவளையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள்; ஒரு பள்ளி இறுதிப் பரீட்சை அவள் கொடுத்திருக்கிறாள். இவள் படித்த படிப்பு எத்தனை? எவ்வளவு புத்தகங்கள் படித்து நோட்ஸ் எழுதியிருப்பாள்? நீயும் நானும் ஒன்று என்று சொன்னாளே?

“உங்களுக்கு அக்கா தங்கை அண்ணன் தம்பி என்று ஒரு வருமே இல்லையா ஸிஸ்டர்?”

“ஏன் இல்லாமல்? ஒரு தம்பி சிகாகோ யுனிவர் சிட்டியில் இருக்கிறான். பெரிய அக்கா டில்லியில் இருக்கிறாள். அம்மா வெகுநாட்களுக்கு முன்பே போய்விட்டாள். அப்பா போய் இரண்டு வருஷங்களே ஆகின்றன. எங்களு டைய வீடு மயிலாப்பூரில் இருந்தது.”

“இப்போது அதை வாடகைக்கு விட்டிருக்கிறீர்களா எலிஸ்டர் ?”

“வாடகையா? அப்போதே விற்றுவிட்டோம். ஓர் அலை போல் கஷ்ட நஷ்டங்கள். நான் கல்யாணம் செய்துகொண்டு குடும்பத்தில் இருக்கவேண்டும் என்பது அப்பாவுக்கு ஆசை. ஏன் ? என் தாயார் நான் அந்தக் காலத்தில் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு அரசியல் கட்சியில் சேர்ந்ததனாலேயே உயிரைவிட்டாள். அவளால் அந்த அதிர்ச்சியையே தாங்கமுடியவில்லை.”

ஞானத்தின் தொண்டை கரகரக்கிறது.
“நீங்கள்.அரசியலில் இருந்தீர்களா..?”
“வெறுமே இருந்தேன் மட்டுமில்லை. அரசியலுக்காகவே வாழ்க்கை என்று சோஷியலிஸ்ட் கட்சியில் முழுநேரத் தொண்டு வேலை செய்தேன். என்னுடைய கல்லூரி நாட்களில் நான் ஆவேசம் வாய்ந்த பேச்சாளி என்று சொல்வார்கள். அதனால் தான் நான் அந்தக் காலத்திலும் நேரு, காந்தி காங்கிரஸில் மனசில்லாமல் புரட்சிக்கட்சியிலேயே இருந்தேன். தற்காலம் நகரில் இருக்கும் மிகப் பெரிய தொழிலதிபர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/209&oldid=1123742" இலிருந்து மீள்விக்கப்பட்டது