பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208

ரோஜா இதழ்கள்

{hwe|களும்,|தொழிலதிபர்}} அரசியல் பதவிகளில் வீற்றிருப்பவர்களில் பலரும் அந்த நாட்களில் என்னுடைய வகுப்புத் தோழர்களாக, கட்சிக் கூட்டாளிகளாக இருந்திருக்கின்றனர். பாரத நாடு சுதந்திரம் பெற்றதும் பதவி லாபங்களைக் கருதி கதர்ச்சட்டை போட்ட பலரை நான் அறிவேன். சுதந்திரம் பெற்றபின், அதற்கு முன் பேசிய நியாயம், நேர்மை, துணிவு என்ற கோட்பாடுகளை மட்டும் தங்களிடம் வைத்துக் கொண்டவர் யாரும் இன்று வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கவில்லை. இன்றைய அரசியலில் அத்தகையோருக்கு இடமே இல்லை.”

“நீங்கள் ஏன் அரசியலில் இருந்து விலகி விட்டீர்கள், எலிஸ்டர் ?”

“விலகினேனா நான் ? என்னைப் போன்றவர்களுக்கு அங்கே இடமில்லை என்று விலக்கிவிட்டது. நம்முடைய பொருள் நமக்குக் கிடைக்குமுன் நம் எண்ணங்கள் நியாயமாக, உண்மையாக இருந்தன. அது நம்மிடையே வந்த பிறகு ஒற்றுமை நல்லெண்ணம் முதலியவற்றை உறிஞ்சிக்கொண்டு, வேறு எதையோ நம் ஆவல்கள் பற்றிக் கொண்டிருக்கின்றன. இந்த விளைவுகளைப் பார்க்கும்போது, நம் மக்கள் மட்டும் இந்த ஆட்சிமுறைக்குத் தகுதி பெறவில்லை என்பதில்லை. தலைவர்கள் என்று கருதப்படுகிறவர்களும் தகுதி பெறவில்லை. எல்லோரும் பதவியும் செல்வாக்கும் வேண்டிக் கட்சி மாறிய பின்னரும், அதே காரணங்களுக்காகக் கட்சி பிளவு பெற்றுப் பிரிந்த பின்னரும் நான் தனியாக நின்றேன். அரசியல் பதவி இல்லையேல், கட்சியமைப்பில் மட்டும் நின்று மக்கள் சமுதாயத்துக்கு ஒரு சிறப்பையும் செய்து விட முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. அதனால் நான் ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சி வேட்பாளரை எதிர்த்துச் சென்ற தேர்தலில் போட்டி இட்டேன்; என் எதிரி யார் தெரியுமா ?”

“யாரோ ?”

“ராஜா...முன்னாள் ஜமீன். பணபலம், ஆள்பலம், அதிகார தோரணை எல்லாமே எனக்கு எதிரியாகக் கச்சை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/210&oldid=1101257" இலிருந்து மீள்விக்கப்பட்டது