பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

209

கட்டிக் கொண்டிருந்தன. மின்மினி உயிர்ப் பூச்சிதான். ஆனால் குழல் விளக்கினொளியில் அது எம்மாத்திரம்? நான் தோற்றுப்போனேன். அந்தத் தோல்வி என்னை நேரடியாகப் பாதித்தாகச் சொல்ல முடியாது. ஆனால் அப்பாவுக்கு அதுவே யமனாயிற்று. என்னுடன் பிறந்த தமக்கை நான் வெற்றி பெற்றிருந்தால் ஓடி வந்திருப்பார். தோல்வியடைந்ததும், ஆளுங்கட்சியை எதிர்த்து நின்ற முட்டாள்தனத்தைச் சொல்லிச் சிரித்தாளாம். நான் ஏதோ தீண்டத்தகாத பாவத்தைச் செய்துவிட்டாற் போல் ஒதுங்கியிருக்கிறார்கள். அப்பாவின் மறைவுக்கு வந்து பார்த்து விட்டு அடுத்த விமானத்தில் கிளம்பிவிட்டாள். செகரட்டேரியட்டில் பெரிய பதவி வகிக்கும் ஐ.ஸி.எஸ். வர்க்கமான அவள் கணவர் வரவேயில்லை. தம்பி அப்போது வெளிநாட்டில் இருந்தான். வீட்டின் மீது கடன் வாங்கி அப்பா என் தேர்தலுக்குச் செலவழிக்கக் கொடுத்தார். கடன்காரர்கள் நெருக்கினார்கள். இறுதி நாட்களில் தான் வாழ்ந்த இடத்தைவிட்டு வெளியேறி உயிரை விடும் கொடுமையை என்னாலேயே அப்போது தாங்கி இருக்க முடியாது, நல்ல காலமாக இறைவன் அந்த நிழலிலேயே அவர் உயிரைப் பறித்துக் கொண்டான். வீட்டை விற்கத் தம்பி உடன்பட்டான். விற்றுவிட்டு அவனோடு ஆறேழு மாசங்கள் ஊர் ஊராகச் சுற்றினேன். பிறகு இந்த வேலை கிடைத்தது. அவன் மறுபடியும் சிகாகோ போனான். நான் இங்கே வந்து ஒன்றரை வருஷமாகிறது.”

வெறும் கல்வி மட்டும் இருந்தால் போதும் என்று மைத்ரேயி நினைத்தாள்!

“நீங்கள் தவறாக நினைக்காமலிருந்தால்...நான் ஒண்ணு கேட்கட்டுமா, ஸிஸ்டர் ?”

“என்ன வேணும்? கேள்.”
“நீயும் நானும் ஒண்ணுன்னு சொன்னீர்கள். நான் எங்கே, நீங்கள் எங்கே! உங்களை அரசியல் ஒதுக்கிவிட்ட தாகச் சொன்னீர்கள். என்னை வாழ்க்கையே ஒதுக்கிவிட்டது. சூடு தெரியாமல் அவசரத்தோடு ருசிக்கப் போய் நாவையே

ரோஇ - 14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/211&oldid=1099943" இலிருந்து மீள்விக்கப்பட்டது